செய்திகள்

வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடி கட்டணம் ஏப்ரல் 1–ந்தேதி முதல் உயர்வு

சென்னை, மார்ச் 30–

ஏப்ரல் 1ம் தேதி முதல் சூரப்பட்டு, வானகரம் சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை நெடுஞ்சாலைகளில் குறுகிய தொலைவுக்குள் அடுத்தடுத்து சுங்கச்சாவடிகள் இருப்பது வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நகராட்சி ,பேரூராட்சி, மாநகராட்சி எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுங்க சாவடிகள் இருக்கக் கூடாது என்ற விதியை மீறி, பல சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் சென்னை மாநகர எல்லைக்குள் வரும் வானகரம், பரனுர், சூரப்பட்டு, சென்னை சமுத்திரம் , நெமிலி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்ற கோரி தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 1ந்தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணத்தை உயர்த்துவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த 2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில் மத்திய அரசு கட்டணத்தை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்துடன் சுங்கச்சாவடி கட்டணத்தையும் உயர்த்துவது என்பது கூடுதல் சுமையாக உள்ளது என்று வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.