செய்திகள்

ராஜஸ்தான் பர்மாரில் பயிற்சியின் போது மிக்-21 ஜெட் விமானம் விபத்து: 2 விமானிகள் பலி

விமானப்படை அதிகாரிகள் விசாரணை

ராஜஸ்தான், ஜூலை 29–

ராஜஸ்தான் பர்மாரில் பயிற்சியின் போது விமானப்படையின் மிக்-21 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் பலியானார்கள். இது குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பர்மார் மாவட்டம் உதர்லாய் விமான தளத்தில் இருந்து நேற்று மாலை இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 ஜெட் ரக போர் விமானத்தை பயிற்சிக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இரவு 9.10 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் பார்மர் அருகே விபத்துக்குள்ளானது. இதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.

விமான விபத்தைத் தொடர்ந்து விமானப்படைத் தளபதி வி.ஆர்.சௌதரியிடம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

பின்னர் இதுதொடர்பாக ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பதிவில், “ராஜஸ்தானில் பார்மர் அருகே விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானப்படை வீரர்களை இழந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

“தேசத்திற்கான அவர்களின் சேவையை ஒருபோதும் மறக்க முடியாது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் இறந்த குடும்பங்களைச் சாந்தே உள்ளன,” என்று அவர் கூறினார்.

கடந்த 1963 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையின் பயன்பாட்டுக்கு வந்தது மிக்-21 ரக விமானம். சோவியத் காலத்தின் ஒற்றை-இயந்திர மல்டிரோல் போர்,தரை தாக்குதல் விமானமாகும், ஒரு காலத்தில் விமானப் படையின் முதுகெலும்பாக இருந்தது. இந்த விமானம் பழமையானதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்க வேண்டிய ஒன்று என கூறப்படுகிறது.

இது குறித்து விமானப்படை அதிகாரிகள் கூறுகையில், விமானிகள் 2 பேர் இழப்புக்கு மிகவும் வருந்துகிறோம். இந்த நேரத்தில் அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறோம். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.