செய்திகள்

மெட்ராஸ் டயாபட்டிஸ் ரிசர்ச் பவுண்டேஷன் – ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய நீரிழிவு பயிற்சி

சென்னை, மார். 16

மெட்ராஸ் டையாபட்டிஸ் ரிசர்ச் பவுண்டேஷன் மற்றும் ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகம் ஆகியவை ஒருங்கிணைந்து நீரிழிவு மீதான ஒரு நாள் பயிலரங்கை நடத்தின.

நீரிழிவு மீதான ஆராய்ச்சியில் இருக்கின்ற வாய்ப்புகளை ஆராய்ந்து அறிவதும், மிக அவசரமாக முன்னேற்றம் தேவைப்படுகிற மிக முக்கிய பகுதிகளை சுட்டிக்காட்டி வலியுறுத்துவதும் இந்த பயிலரங்கின் குறிக்கோளாகும்.

நீரிழிவு ஆராய்ச்சி” எண்ணற்ற வாய்ப்புகள் கொண்ட ஒரு செழுமையான களம்”என்ற தலைப்பில் இப்­ப­யிற்சி நடந்­த­து.

சென்னை ஆஸ்திரேலிய துணைத்தூதரான சூசன் கிரேஸ், டீகின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் தலைவர் ஜேன் டென் ஹாலன்டர், டீகின் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பிரிவின் அசோசியேட் டீன் டேவிட் ஆஸ்டின், மெட்ராஸ் டையாபட்டிஸ் ரிசர்ச் பவுண்டேஷன் தலைவர் வி. மோகன் மற்றும் சென்னை, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பிரிவின் டீன் (பொறுப்பு) எஸ்.பி. தியாகராஜன், ஆகியோர் இந்த பயிலரங்கின் அமர்வை தொடங்கி வைத்தனர்.

ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்திற்கும், இந்தியாவிற்குமிடையே 25 ஆண்டுகால ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பு நல்லுறவை நினைவுகூர்ந்து கொண்டாடும் விதமாக ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீடு ஆணையம் மற்றும் அதன் இந்திய கூட்டு முயற்­சி­யா­ளர்­க­ளோ­டு ஒருங்கிணைந்து, பல்வேறு நிகழ்வுகளை டீகின் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்தியாவிற்கும் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுகளில் எதிர்கால ஒத்துழைப்பு நடவடிக்கைகளை ஆராய்வதும் இந்த நிகழ்வுகளின் நோக்கமாகும்.

டீகின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் தலைவர் ஜேன் டென் ஹாலன்டர், இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் டிரான்ஸ்பர்மேஷன் இயக்குனர்அன்னா பீட்டர்ஸ்,ஸ்கூல் ஆப் மெடிசின் டீன்ஜான் வாட்சன்,அசோசியேட் ஹெட் ஆப் ஸ்கூல் (ஆராய்ச்சி) ஜோ வில்லியம்ஸ்,ஸ்கூல் ஆஃப் மெடிசின் மனித உயிரியல் துறையின் முதுநிலை பேராசிரியர் கேத்ரின் ஆஸ்டன் மோர்னி,ஸ்கூல் ஆப் நர்சிங்கின் பேராசிரியர் விர்ஜினியா ஹேகர்மற்றும் வளர்சிதை மாற்ற நோய்கள் பிரிவின் தலைவரான கென் வால்டர்ஆகியோர் இப்பயிலரங்கில் கலந்துகொண்டனர்.

வி.மோகன்

இப்பயிலரங்கு குறித்து மெட்ராஸ் டையாபட்டிஸ் ரிசர்ச் பவுண்டேஷன் தலைவரும் மற்றும் டீகின் பல்கலைக்கழகத்தின் கௌரவ பேராசிரியருமான வி. மோகன்கூறியதாவது:

“ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக டீகின் பல்கலைக்கழகத்துடன் மெட்ராஸ் டையாபட்டிஸ் ரிசர்ச் பவுண்டேஷன் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகிறது. டீகின் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் மற்றும் ஒத்துழைப்போடு முனைவர் (Ph.D) கல்வித்திட்டங்களும் மற்றும் நீரிழிவிற்கான செவிலியர் கல்வியாளர் கல்வித்திட்டமும் மெட்ராஸ் டையாபட்டிஸ் ரிசர்ச் பவுண்டேஷனில் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை 3 மாணவர்கள் அவர்களது முனைவர் பட்டப்படிப்பை நிறைவுசெய்திருக்கின்றனர். இன்னும் 3 மாணவர்கள் அவர்களது முனைவர் பட்டத்திற்கான கல்வித்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். மெட்ராஸ் டையாபட்டிஸ் ரிசர்ச் பவுண்டேஷனில் 30 செவிலியர்கள், நான்கு மாதகால பாடத்திட்டமான செவிலியர் கல்வியாளர் கல்வியினை முடித்திருக்கின்றனர். இந்த இரு கல்வித்திட்டங்களுமே இந்தியாவில் மிக வெற்றிகரமான ஒத்துழைப்புடன் கூடிய முனைப்புத் திட்டங்களாகும்.

இந்தியாவில் நீரிழிவு என்ற பெரும் பிரச்சனையை சமாளிப்பதற்காக நீரிழிவு தொடர்பான செயல்தளத்தில் பணியாற்றி வருகின்ற புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள், அறிவியலாளர்கள், மருத்துவர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களோடு ஒருங்கிணைந்து இது குறித்த ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளையும், இருக்கின்ற சவால்களையும் மற்றும் எட்டப்பட வேண்டிய தீர்வுகளையும் குறித்து எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு விவாதிப்பதற்காக இப்பயிலரங்கை நடத்துவதில் டீகின் பல்கலைக்கழகத்துடன் மெட்ராஸ் டையாபட்டிஸ் ரிசர்ச் பவுண்டேஷன் கூட்டாண்மையாக செயல்படுகிறது” .

இவ்­வாறு அவர் கூறி­னார்.

ஆர்.எம். அஞ்சனா

மெட்ராஸ் டையாபட்டிஸ் ரிசர்ச் பவுண்டேஷன் துணைத்தலைவர் ஆர்.எம். அஞ்சனாகூறு­கையில்,

டீகின் பல்கலைக்கழகத்துடன் கடந்த 5 ஆண்டுகள் நாங்கள் மேற்கொண்ட ஒத்துழைப்பு மற்றும் நல்லுறவை கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். சர்வதேச பிஹெச்டி கல்வித் திட்டங்களுக்கு மருத்துவ மாணவர்களுக்கு அணுகுவசதியை வழங்குவதற்காகவும் மற்றும் நீரிழிவு துறையில் செவிலியர் கல்வியாளர் என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தவும் இப்பல்கலைக்கழகத்துடன் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். இத்துறையில் அறிவு மற்றும் தகவல் பகிர்வு மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பு ஆகியவற்றின் வழியாக நீரிழிவு ஆராய்ச்சியின் வரம்பெல்லையை இன்னும் விரிவுபடுத்துவதை குறிக்கோளாக கொண்டு இன்று நடைபெற்ற பயிலரங்கை நாங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறோம்.

நீரிழிவுக்கான சிகிச்சையின் மிக முக்கிய அம்சங்கள் மீதான ஆராய்ச்சியை இன்னும் தீவிரப்படுத்தவும் மற்றும் கூட்டுவகிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இது வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்­றார்.

டேவிட் ஆஸ்­டின்

டீகின் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பிரிவின் அசோசியேட் டீன் டேவிட் ஆஸ்டின் பேசுகையில்,

“நீரிழிவு உட்பட, தொற்ற இயலா நோய்கள், இந்தியாவில் மிக முக்கியமான சுகாதார மற்றும் முன்னேற்றப் பிரச்சனைகளாக இருந்து வருகின்றன. பொதுவான வளர்ச்சிதை மாற்ற கோளாறுகளுள் ஒன்றான நீரிழிவு, உலகளவில் தொடர்ந்து நிலையாக அதிகரித்து வருகிறது. அத்துடன், வசதியான, வளர்ச்சியடைந்த நாடுகளில் மட்டும் காணப்படுகிற ஒரு உடல்நல பிரச்சனையாக அது இப்போது இல்லை.

அதிக எண்ணிக்கையில் நீரிழிவு நோயாளிகள் இருக்கின்ற இரண்டாவது பெரிய நாடாக உலகளவில் இந்தியா இருக்கிறது மற்றும் மக்கள்தொகையில் வெவ்வேறு பிரிவினர் மத்தியிலும் பரவலாக நீரிழிவு நோய் காணப்படுகின்ற நாடாகவும் இது இருக்கிறது. நீரிழிவு பாதிப்புள்ள இந்த அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு நீரிழிவு சிகிச்சையையும், கவனிப்பையும் வழங்குவது கணிசமான தடைகளும், சிரமங்களும் இங்கு இருக்கின்றன.

ஆகவே, நீரிழிவு மீதான ஆராய்ச்சிக்கான வாய்ப்புக்களும் இந்தியாவில் மிகப்பெரிய சாத்தியத்திறன் உள்ளவையாக இருக்கின்றன. இவ்வாறாக நீரிழிவு மீதான இப்பயிலரங்கானது, இந்த இலக்கை சென்றடைவதை நோக்கிய ஒரு சிறிய முன்னேற்ற நடவடிக்கையாகும்: ஆனால், இன்னும் செய்யப்பட வேண்டியவை மிக அதிகமாக இருக்கின்றன. இந்தியாவில் நீரிழிவு நோய் வராமல் தடுப்பது மற்றும் அதற்கு உகந்த சிகிச்சையளிப்பதில் ஆராய்ச்சி யோசனைகளை முன்வைப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதை, நீரிழிவு மீது இன்று நடத்தப்படுகிற டீகின்- MDRFபயிலரங்கு நோக்கமாக கொண்டிருக்கிறது.

அறிவையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்வதற்கான தளமாகவும் இது இருக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட மற்றும் மருத்துவ மற்றும் தொழில்துறை பணியாளர்களை உள்ளடக்கிய நிபுணத்துவ குழுவுடன் கலந்துரையாடி பிணைப்புகளை உருவாக்குவதற்கான சிறப்பான வாய்ப்புகளையும் இப்பயிலரங்கு வழங்கும்,”என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *