செய்திகள்

மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் மீண்டும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அப்போலோ மருத்துவமனையில் நவீன சிகிச்சை

சென்னை, ஆக. 22–

மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அப்போலோ மருத்துவமனையில் நவீன சிகிச்சையை டாக்டர் மதன் மோகன் ரெட்டி துவக்கி, ஒரு மாதத்தில் 100 ஆபரேஷன் செய்து சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து டாக்டர் மதன் மோகன் ரெட்டி கூறுகையில்,

அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து நாடுகளில் பிரபலமான இந்த நவீன சிகிச்சையில், செயற்கை மூட்டுடன் வைட்டமின் ‘இ’ வெளியிடும் வசதி இருப்பதால், இந்த புதிய மூட்டு தேயாது. எலும்புக்கு உறுதி கொடுக்கும்.

துவக்க நிலையில் மூட்டு வலி உள்ளவர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை எளிதாக செய்து கொள்ளலாம். அரசு நிர்ணயித்த கட்டணத்தில் இந்த சிகிச்சை செய்யப்படும்.

இந்த சிகிச்சைக்கு பயானிக் கோல்டன் கால் மூட்டு மாற்று ஆபரேஷன் என்று பெயராகும். இந்த மூட்டு மாற்று ஆபரேஷனுக்கு பிறகு படி ஏறலாம், நீண்ட தூரம் நடக்கலாம். வலி இருக்காது.

இந்தியாவில் 18 கோடி பேர் மூட்டு சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்த நவீன ஆபரேஷன் வரப்பிரசாதமாக இருக்கும் என்றார்.

சென்னை, நெல்லூர், அரகொண்டா ஆகிய மருத்துவமனைகளிலும், சென்னை சன்வே மூட்டு கிளினிக்கில் டாக்டர் மதன் மோகன் ரெட்டி பணிபுரிகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *