நல்வாழ்வு
மீன்களில் குறிப்பாக சாலை மீன் அல்லது சால்மன் (salmon fish), பொடிமீன் அல்லது ஹெர்ரிங் (herring fish) போன்ற மீன் வகைகளை சாப்பிட்டால் பெண்கள் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.
காரணம் இந்த மீன்களில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் D நிறைந்துள்ளது. அது மட்டுமின்றி மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் கூந்தல் வறட்சியின்றி எப்போதும் தேவையான ஈரப்பதம் இருந்து கூந்தல் அதிகளவு வளர்வதற்கும் இது வழிவகை செய்கிறது.
பொதுவாகவே கடல்வாழ் சுறா , எறா , கொடுவாய் , வஞ்சிரம், கிழங்கன், முறல், மாவ்லா, சீலா , செங்கனி , திருக்கை , நண்டு , கணவாய் , காரா , சூடம், கொய், வெங்கணா, சங்கரா, நெத்திலி, சென்னாக்கூனிப்பொடி ஆகிய மீன்களிலும் வைட்டமின் D நிறைந்துள்ளது. அது மட்டுமின்றி ஒமேகா-3 ஃபேட் – நல்ல கொழுப்பு அதிகமிருப்பதால் முடி, தோல் , உடல் வளர்ச்சிக்கு மிகமிக நல்லது.