செய்திகள் முழு தகவல்

மனம் தளரா மங்கை ஹெலன் கெல்லர்!பெண்ணே பெண்ணே

ஆணும் பெண்ணும் சரி நிகர்

சமம் எனக் கொள்..

 அச்சம் நாணம் தவிர்             

மகாகவி பாரதி

இது புதுமை பெண்ணுக்காக மகாகவி பாரதி எழுதிய கவிதை வரிகள் .

ஒரு பெண் ஆண்களை விட மனதளவில் வலிமை பெற்றவள். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறமை உடையவள். மெழுகுவர்த்தியை போல தன்னை உருக்கி, தன்னை நம்பி இருப்பவருக்கு ஒளியைத் தருபவள் . அரிசியோ ,கீரையோ கிடைப்பவற்றை கொண்டு அமுது படைப்பவள். சமூதாயத்தால் தனக்கு ஏற்படும் தடைகளை அச்சமின்றி எதிர்ப்பவள். இவள் தானா பெண் எனக் கேட்டால், தன் அளவிடமுடியா திறனாலும் செயலாலும் அவர்களை திக்குமுக்காட செய்பவள் தான் பெண்.

இவ்வாறாக தன் தன்னம்பிக்கை, விடாமுயற்சி கொண்டு போராடி உலகமே தன்னை வியப்பாக திரும்பிப் பார்க்கச் செய்த மனம் தளரா மங்கை தான் இந்த ஹெலன் கெல்லர்.

அமெரிக்காவை சேர்ந்த ஹெலன் கெல்லர்  சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். இளம் வயதினிலேயே தன் பார்க்கும் திறன் ,கேட்கும் திறன் மற்றும் பேசும் திறனை இழந்த இவர், தனது  தன்னம்பிக்கையாலும் கடின உழைப்பாலும் உலக சாதனை படைத்துள்ளார்.

சிறுவயதும்  ஹெலனும்

ஹெலன் சிறு வயதில், ஏற்பட்ட மூளை காய்ச்சலால் தனது உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்த முடியாமல் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார். இதனால் பார்வையற்றோருக்கான ‘பெர்கின்ஸ்’ பள்ளிக்கு அனுபப்பட்டர்.

அங்கு அவர், அதிர்வுகள் மூலம் பேசுவதை புரிந்துகொள்ளும் கலையை கெல்லருகு ”சல்லிவான்  என்கிற ஆசிரியரிடமிருந்து   கற்றுக்கொண்டார். ஒவ்வொரு பொருட்களையும் தொட்டு அவற்றை தெரிந்து கொள்ள தன்னை பழக்கிக்கொண்டார். அதன் பின் எழுதவும் கற்றுக்கொண்டார். எதையும் விரைவாக கற்று கொள்ளும் திறன் கெல்லர்க்கு இருந்ததால், தனது பத்து வயதுக்கு முன்பே கண் பார்வையற்றோருக்கான பிரயில் முறையில் ஆங்கிலம் ,பிரென்சு, ஜெர்மன், கிரெக்கம்,லத்தீனம் ஆகிய மொழிகளை கற்றுக் கொண்டார்.

1904-ல் ஹெலன் தனது ஆசிரியருடன் நியூயார்க் சென்று அங்கே, காது கேளாதோருக்கான ”ரைட் ஷு  மாசன்” பள்ளியில் சேர்ந்தார். அங்கு கெல்லர் சாராஃபுல்லெர் என்ற ஆசிரியரிடமிருந்து பேசும்போது வாய் உதடுகள் மற்றும் நாக்கின் அசைவுகளைக் தொட்டு உணர்ந்து பேசவும், பிறர் பேசுவதை புரிந்துக்கொள்ளவும் கற்றுக்கொண்டார்.  இதன் மூலம் தட்டுத்தடுமாறி பேசிய அவரால் இறுதி வரை தெளிவாக பேசமுடியவில்லை. ஆனாலும் மனம் தளராமல் முயற்சிய செய்து கொண்டேயிருந்தார்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஓய்வின்றி உழைத்து 1904 ல், தனது 24 வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். பார்க்கும் திறன் மற்றும் பேசும் திறன் இல்லாமல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பை பெற்றார்.

எழுத்தாளரும் பேச்சாளருமான ஹெலன் அறிவாற்றலிலும் தன் நெஞ்சுரத்திலும் மற்றவர்களுக்கு சற்றும் சளைக்காத  பெண்ணாகவே இருந்தார். மேலும் தன் வாழ்நாளில் பார்வை மற்றும் கேட்கும் திறனை இழந்தவர்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்தார். அவர்களுக்கான பள்ளிகள் அமைத்தார். பார்வையற்றோருக்கான  தேசிய நூலகம் ஒன்றினை உருவாக்கினார்.

1903 ல் ’ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை முதலில் எழுதிய கெல்லர், பின்பு பல நூல்களை எழுதி, அவற்றை வெளியிட்டார். கல்லூரி நாட்களில் வெளிப்பட்ட ஹெலனின் எழுத்தார்வம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் அவரைத் தொடர்ந்தது. மராத்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தன்னம்பிக்கை – ஒரு கட்டுரை, இருளிலிருந்து ,என் மனம் அமைதி ,பெண்ணுரிமை, சமூகவியல், கன்சல்டன்ஸி இன் ஆசிரியை, திறந்த கதவு, சஞ்சிகை, நம்பிக்கை கொள்ளும் போன்ற பல கட்டுரைகளையும், நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

அரசியல் ஈடுபாட்டில் கெல்லர் :

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக போராடும் ஒரு வழக்கறிஞராக திகழ்ந்தார் . அமெரிக்கா பிறப்பு கட்டுப்பாடு சங்கத்தில் ஆதரவாளராக தீவிர அரசியலில் ஈடுபட்டார் . 1915 ல் உடல் நலம் ,மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ள ஜார்ஜ் கெல்லெருடன்  இணைந்து சர்வதேச அமைப்பு ஒன்றை தொடங்கினார். 1920ல் அவர் அமெரிக்க உள்நாட்டு உரிமைகளுக்கான  ACLU ஒன்றியத்தை தொடங்கினார். அமெரிக்க சோசியலிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும், ஆதரவாளராகவும் இருந்தார்.

உலகின் மிகச் சிறந்த பெண்மணி கெல்லர்

1999களில் கெல்லர் இருபதாம் நூற்றாண்டின் உலகின் மிகச் சிறந்த பெண்மணியாக அறியப்பட்டார். 2003 இல் அலபாமா மாநிலம் அம்மாநிலத்தின் சிறந்த குடிமகளாக அவரை அறிவித்தது.

மேலும் அலபாமாவில் உள்ள செப்பீல்டு மருத்துவமனை ஹெலன் கெல்லர் மருத்துவமனையாக மாற்றப்பட்டது. ஸ்பெயின், கடாபி, லாடு, இஸ்ரேல், போர்சுகல், பிரான்சு ஆகிய நாடுகளில் தெருக்களுக்கு ”ஹெலன் கெல்லருடைய” பெயர் சூட்டப்பட்டது. இந்தியாவின் மைசூர் மாகாணத்தில் கே.கே. சீனிவாசன் என்பவரால் நிறுவப்பட்ட வாய்பேசாதோர் மற்ரும் காதுகேளாதோருக்கான முன்பருவப் பள்ளி ஹெலன் கெல்லர் பெயரால் மாற்றப்பட்டது.

2009, அக்டோபர் 7 இல் அலபாமா மாநிலத்தில் ஹெலன் கெல்லருக்கு வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. மேலும் ஹெலன்கெல்லர் தனது ஏழு வயதில் ஆசிரியர் ஆன் சல்லிவனுடன் முதன் முதலாக தண்ணீரைத் தொட்டுணர்ந்த காட்சி சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. அங்கு பிரெய்லி எழுத்துகளில் “உலகிலேயே எங்கும் காணமுடியாத, தொட முடியாத இதயத்தால், உணரப்பட்ட அழகிய பொருள்” என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.   மாற்றுத் திறனாளிக்கு தலைநகரில் சிலை வைக்கப்பட்டது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.


Leave a Reply

Your email address will not be published.