வாழ்வியல்

மனப் போராட்டம் மனக் கோளாறு மன அதிர்ச்சி ஏற்பட அடிப்படை காரணம் என்ன?

இந்தியாவில் கைத்தொழில்கள் , சிறு குறு பெருந் தொழில்கள் பெருகப் பெருகப் பட்டணங்களும் பெரும் நகரங்களும் பெருகத் தொடங்கின. இன்று கிராமங்களும் நகரங்களின் அனைத்து வசதிகளோடும் மக்களை வாழவைத்துக் கொண்ட்டிருக்கிறது.

நாகரிக வாழ்க்கையின் வசதிகளையும் அதனால் ஏற்படும் தீமைகளையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

நமது வாழ்க்கையிலும் அமைதி குறைந்து வருகிறது.

பரபரப்பும் இரைச்சலும் அர்த்தமற்ற வேகமும் எல்லா நாட்டிற்கும் பொதுவான அம்சங்களாக மாறி வருகின்றன. அதனால் எங்கும் இன்று மனக்கோளாறுகள் அதிகரித்து வரும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மனத்திற்கும் மூளைக்கும் நரம்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும் அதிர்ச்சியைத் தரக்கூடிய எத்தனையோ காரியங்கள் இக்கால நாகரிக வாழ்க்கையில் நிகழ்கின்றன.

வாழ்க்கையில் அமைதி குறைந்து வருகின்றது. உடல் உழைப்பைக் குறைப்பதற்கான யந்திரங்களும் மிகப்பெரிய வேகத்தில் வளர்ந்திருக்கின்ற கணினி , தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் தூரத்தை வெல்லக்கூடிய போக்குவரத்துச் சாதனங்களும் மனிதனுக்கு அதிகம் ஓய்வைக் கொடுத்து அமைதியைப் பெருக்குகின்றன என்று நினைக்கிறோம்.

ஆனால் நடைமுறையிலே அப்படியொன்றும் நிகழவில்லை.

நவீன யந்திரங்களையும் சாதனங்களையும் அதிகமாகப் பயன்படுத்துபவர்களே மிகுந்த பரபரப்பு உடையவர்களாயும் அமைதி குறைந்தவர்களாயும் இருக்கிறார்கள்.

பரபரப்பு மிகுந்த நவீன வாழ்க்கையோடு குடி முதலிய பழக்கங்களும் மன அதிர்ச்சியை விளைவிக்கிறது.

காப்பி டீ , குளிர் பானங்களும் நரம்புகளுக்குக் கிளர்ச்சியையும் தளர்ச்சியையும் கொடுக்கின்றன; ஆனால் மதுபானம் செய்கின்ற தீமையே மிகுதி. தீராத கவலை, சோர்வு, மனப் போராட்டம் முதலியவைகளும் மனக் கோளாறுகளுக்குக் காரணமாகின்றன.

மனம் மிக நுட்பமானது. அதிலே எப்படி எப்படியோ காரியங்கள் நிகழ்கின்றன; சிக்கல்களும் குமுறல்களும் ஏற்படுகின்றன. அதை ஆழ்ந்து கவனிக்கக் கவனிக்க அதிசயமான பல உண்மைகள் வெளியாகின்றன. குடியைத் தொடாதவர்கள் , குடியை விட்டவர்கள் மட்டுமே மனப் போராட்டம் மனக் கோளாறு மன அதிர்ச்சி ஏற்படாமல் முன்னேற்றமடைந்து வருகிறார்கள் என்பதே அடிப்படை உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *