வாழ்வியல்

புதுமையான கண்டுபிடிப்பு ஆய்வுகள்: மூன்றாம் இடம் பிடித்து வேலூர் விஐடி சாதனை

புதுமையான கண்டுபிடிப்பு சாதனைகள் குறித்த ஆய்வுகளில் விஐடி வேந்தர் விவநாதனின் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி) மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மத்திய அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு நிதி அளிக்கும் தன்னாட்சி கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுமையான கண்டுபிடிப்பு சாதனைகள் குறித்த ஆய்வுகளின் படி, கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் (ஏஆர்ஐஐஏ) வெளியிடப்பட்டு வருகிறது.

மாநில அரசின் நிதி பெறும் தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் புனேவின் காலேஜ் ஆப் இன்ஜினீயரிங் முதலிடத்தையும் கர்நாடகா பிஇஎஸ் பொறியியல் கல்லூரி 2 ம் இடத்தையும் கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 3 ம் இடத்தையும் பெற்றுள்ளன. தனியார் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி) மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *