செய்திகள்

பிரேசிலில் 24 மணி நேரத்தில் 3,459 பேர் கொரோனாவுக்கு பலி

ரியோடி ஜெனிரோ, ஏப்.15–

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,459 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 73,513 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 1 கோடியே 36 லட்சத்து 73 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஒரே நாளில் தொற்று பாதித்த 3,459 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக பிரேசிலில் கொரோனா பலி நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது.

பிரேசிலில் இதுவரை 2.95 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *