செய்திகள்

பிசிசிஐ மருத்துவக் குழு மூத்த உறுப்பினருக்கும் கொரோனா

டெல்லி, செப். 3-

ஐபிஎல் வீரர்களை தொடர்ந்து பிசிசிஐ மருத்துவக்குழு மூத்த உறுப்பினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு மருத்துவக் குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாததை அடுத்து, ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளன. இதற்காக வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையெ சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட சில அணிகளை சேர்ந்த 13 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து வீரர்கள் பாதிக்காமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ஐபிஎல் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் வீரர்களை தொடர்ந்து பிசிசிஐ இன் மருத்துவக் குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள பி.சி.சி.ஐ வட்டாரங்கள், மருத்துவக் குழுவின் மூத்த உறுப்பினர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளது உண்மைதான்.

ஆனால் அந்த மூத்த மருத்துவ அதிகாரி அறிகுறியற்றவர் மற்றும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதால் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்ற போது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளன.

மேலும் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், அடுத்த சுற்று சோதனையில் அவர் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அதுமட்டுமின்றி நாங்கள் பெங்களூரூவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியிலும் கொரோனா பாதிக்கப்பட்ட எங்கள் இரண்டு நபர்களைக் கொண்டுள்ளோ அவர்களும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *