செய்திகள்

பயணிகளில் இல்லாததால் 104 விமானங்கள் ரத்து

சென்னை, மே 10–

பயணிகள் கூட்டம் இல்லாததால், 104 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் பயணிகள் கூட்டமில்லாமல் வெறிச்சோடின. உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் இன்று 104 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சா்வதேச விமான நிலையத்தில் இன்று 10 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

சென்னை சா்வதேச விமானநிலையத்தில் வழக்கமாக வெளிநாடுகளிலிருந்து வந்தே பாரத் மற்றும் சிறப்பு விமானங்கள் தினமும் 20 க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்துகொண்டிருந்தன. ஆனால் இன்று 3 வந்தே பாரத் விமானங்கள் உட்பட 10 விமானங்கள் மட்டுமே வருகின்றன. அதிலும் மிகவும் குறைவான பயணிகளே வருகின்றனர்.

அதேபோல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலும் இன்று மிகவும் குறைவான விமானங்களே இயக்கப்படுகின்றன. அதன்படி இன்று 50 புறப்பாடு விமானங்கள், 49 வருகை விமானங்கள் மொத்தம் 99 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதில் சென்னைக்கு வரும் விமானங்களில் சுமார் 2 ஆயிரம் பயணிகளும், இங்கிருந்து புறப்படும் விமானத்தில் 4500 பயணிகளும் பயணிக்க உள்ளனர்.

சென்னையிலிருந்து புறப்படும் விமானத்தில் 2 ஆயிரம் பேர் ஊரடங்கு காரணமாக வட மாநிலங்களுக்கு தங்கள் சொந்த ஊர் திரும்புபவர்கள். அடுத்த இரண்டு வாரங்களுக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு நீடிக்கும் என்பதால் அடுத்தடுத்த நாட்களில் எஞ்சியிருக்கும் விமானங்களும் ரத்து செய்யும் சூழல் உருவாகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *