சினிமா செய்திகள்

நாளை வெளியாகிறது ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் எழுதி, பாடிய பாடல்

சென்னை, மே.21–

ஜகமே தந்திரம் திரைப்படத்தில், தனுஷ் எழுதி, பாடியுள்ள ‘நேத்து’ என்ற பாடல் நாளை வெளியாக உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. இந்தப் படம் கடந்த ஆண்டு மே மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக வெளியாகாமல் தள்ளப் போனது. இந்நிலையில், இப்படம் ஓடிடியில் வெளியாகுமா? அல்லது தியேட்டரில் வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இதைத் தொடர்ந்து, இப்படம் ஜூன் மாதம் 18ந் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படம் கிட்டத்தட்ட 17 மொழிகளில் டப் செய்து வெளியாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டரில், ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனுஷ் பாடியுள்ள ‘நேத்து’ என்ற வீடியோ பாடல் நாளை காலை 11 மணியளவில் வெளியாக உள்ளதாகவும் இப்பாடலை தனுஷே எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியான ‘புஜ்ஜி’ என்ற பாடல் மக்களிடையே நல்ல வரவெற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *