சினிமா

‘தமிழரசன்’ ; 4 காமிராக்கள் மூலம் படமான மாணவர்கள் போராட்டம்

“தமிழரசன்” . எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம். விஜய் ஆண்டனி நாயகனாக, நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்கள். சோனு சூட் – முக்கிய வில்லன் வேடம். பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு :- ஆர்.டி.ராஜசேகர், இசை :- இளையராஜா, பாடல்கள் :- பழனிபாரதி, ஜெய்ராம் கலை -: மிலன், ஸ்டண்ட் -: அனல் அரசு, எடிட்டிங் :- புவன் சந்திரசேகர், நடனம் :- பிருந்தா சதீஷ், தயாரிப்பு மேற்பார்வை :- ராஜா ஸ்ரீதர், கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம் :- பாபு யோகேஸ்வரன்.

படப்பிடிப்பு 15 நாட்கள் சென்னையில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி – ரம்யா நம்பீசன் சம்மந்தப் பட்ட காட்சிகள் மற்றும் விஜய் ஆண்டனி வில்லன் சோனு சூட் மோதும் ஆக்‌ஷன் காட்சிகள் படமானது. அத்துடன் 1000 கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டக் காட்சிகளை 4 காமிராக்களை கொண்டு ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினார். இந்த காட்சிகள் திரையில் மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *