செய்திகள்

தமிழகம் முழுவதும் 28 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்: ஐகோர்ட் உத்தரவு

Spread the love

சென்னை, மே.23-

தமிழகம் முழுவதும் 28 மாவட்ட நீதிபதிகளை இடமாற்றம் செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை குடும்பநல கோர்ட் முதன்மை நீதிபதி ஏ.கே.ஏ.ரஹ்மான், நாகை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவராகவும், சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் நீதிபதி டி.லிங்கேஸ்வரன், சென்னை 12வது சி.பி.ஐ. கோர்ட் நீதிபதியாகவும், விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் நீதிபதி ஜி.விஜயலட்சுமி, சென்னை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவராகவும், திருவள்ளூர் 4வது கூடுதல் செசன்சு கோர்ட் நீதிபதி இருசன் பூங்குழலி, திருவண்ணாமலை கூடுதல் செசன்சு கோர்ட் நீதிபதியாகவும், பூந்தமல்லி 2-வது கூடுதல் செசன்சு கோர்ட் நீதிபதி ஜி.சாந்தி, விழுப்புரம் மகளிர் கோர்ட் நீதிபதியாகவும், புதுக்கோட்டை எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் நீதிபதி எம்.ராஜலட்சுமி, சென்னை மகளிர் கோர்ட் நீதிபதியாகவும், தஞ்சாவூர் 2-வது கூடுதல் செசன்சு கோர்ட் நீதிபதி கே.ரவி, சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் நீதிபதியாகவும், பூந்தமல்லி 3-வது கூடுதல் செசன்சு கோர்ட் நீதிபதி ஜி.டி.அம்பிகா, செங்கல்பட்டு மகளிர் கோர்ட் நீதிபதியாகவும், திருவண்ணாமலை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் நீதிபதி ஜி.விஜயராணி, திருவள்ளூர் 4-வது கூடுதல் செசன்சு கோர்ட் நீதிபதியாகவும் என மொத்தம் 28 மாவட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *