சென்னை, பிப். 18–
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.63,760-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச அளவிலான மாற்றங்களுக்கு ஏற்ப தங்கம் விலை அவ்வப்போது ஏறுவதும், இறங்குவதும் உண்டு. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறிக்கொண்டே செல்கிறது.
சவரனுக்கு ரூ.240 உயர்வு
அதன்படி நேற்று ஆபரணத்தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,940 எனவும் ஒரு சவரன் ரூ. 63 ஆயிரத்து 520க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ரூ. 7,970 க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு இன்று ரூ. 240 உயர்ந்து ரூ.63 ஆயிரத்து 760 க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி கிராம் ரூ.108 க்கும், ஒரு கிலோ கட்டிவெள்ளி ரூ. 1 லட்சத்து 8 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.