செய்திகள்

ஜோதிடத்தில் உள்ள மூடநம்பிக்கைக்கு யாரும் அடிமையாகிவிடக் கூடாது

ஜோதிட புத்தக வெளியிட்டு விழாவில் ஐகோர்ட் நீதிபதி டீக்காராமன் பரபரப்பு பேச்சு

சென்னை, ஜன. 18–

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்எம்டி டீக்காராமன் ஜோதிடம் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், ஜோதிடத்துக்கு யாரும் அடிமையாகக்கூடாது என்று கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த ஜோதிடம் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன் கலந்து கொண்டு பேசியதாவது:–

ஜோதிடம் என்பது எனக்கு கிட்டத்தட்ட 38 ஆண்டுகளாக ஒரு பொழுதுபோக்காக உள்ளது. நான் நீதிபதி பணி சுமையில் இருப்பதால் சில ஆண்டுகளாக இதை பின்பற்றவே முடியவில்லை. எனக்கு தெரிந்த வகையில், ஜோதிடம் என்பது பல்வேறு விதமாக பஞ்சாங்கங்களின் அடிப்படையில் இருக்கிறது.

ஜோதிடத்தில் மூட நம்பிக்கை

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிடத்தில் மூட நம்பிக்கை அதிகம் உள்ளது என்றும், அறிவியல்பூர்வமானதை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சமுதாயத்தில் உருவாகியது. எனினும் ஏராளமான ஜோதிடங்கள் புதிதாக உருவாகின. அதில் ஒன்று பிரபஞ்ச ஜோதிடம்.

இந்த சம்பவம் இந்த காலக்கட்டத்தில் நடக்கும் என்று ஜோதிடர் கூறியதை அப்படியே நம்பிக் கொண்டு சும்மா உட்காந்து இருந்தால், அவர்கள் எல்லாம் ஜோதிடத்துக்கு அடிமையானவர்கள். எனவே அதுபோல ஜோதிடத்தில் உள்ள மூடநம்பிக்கையை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.

எந்த ஒரு விஷயமும் அறிவியல்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறதோ? நம்முடைய அறிவியல் அறிவுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதோ அதை மட்டும் நாம் ஏற்று கொள்ள வேண்டும். அதற்கு மேல் உள்ளதை மூட நம்பிக்கை என்று நாம் அதனை ஒதுக்கி தள்ளிட விட வேண்டும்.

நாம் ஜோதிடத்தை ஒரு பக்கம் நம்பினாலும், வெற்றி பெற நாமும் முயற்சி செய்ய வேண்டும். ஜோதிடத்துக்கு யாரும் அடிமையாகக்கூடாது. இவையெல்லாம் என்னுடைய தனிப்பட்ட கருத்து. இவ்வாறு நீதிபதி டீக்காராமன் பேசி உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *