வாழ்வியல்

சேமித்தால் வாழ்வு இனிக்கும்

Spread the love

இன்று இனிக்கும் இல்வாழ்க்கை அது
என்றும் நிலைத்திட வழியுண்டு!
ஒன்று இருக்குது உறுதி சொல்வேன்; அதை
நன்றென கொண்டால் விடிவெள்ளி!
*
விரலுக்கு உகந்த வீக்கம் உடல் மனம்
விளங்கிட வேண்டும் விவேகமுடன்!
வரவுக்கு மீறி செலவு செய்தால் பின்
வாழ்க்கை முழுவதும் வளரும் கடன்!!!
*
செலவைக் குறைத்து சிக்கனமாய் நாளும்
செயல்பட வேண்டும் எக்கணமும்!
மலரும் அதிலே பேரின்பம் ! அங்கு
குலவும் என்றும் குதூகலம்!
*
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!
கையில் காற்றுள்ள போதே சேர்த்துக்கொள்!!
ஊற்றுப் பெருக்கால் வளரும்!
வரலாற்றில் வாழ்விது நிலவும்!!
*
இரும்பை போல சேமித்தால்
கரும்பு போல வாழ்வு இனிக்கும்!
துரும்பென இதனை நினைக்காதீர்!
சிற்றுளி தானே உயர்சிலை படைக்கும்!!
*
சிக்கனம் வீட்டை தினம் காக்கும்!
சிறுசேமிப்பு நாட்டையே காக்கும்
எக்கணமும் இதை மறவாமல் நாம்
என்றும் சிந்தித்தே வாழ்வோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *