செய்திகள்

செப்டம்பர் 27, 28ல் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சர்வதேச மருத்துவ சிகிச்சை தொழில்நுட்ப கண்காட்சி

Spread the love

சென்னை, ஆக.24

சர்வதேச மருத்துவ சிகிச்சை பற்றிய நவீன தொழில்நுட்ப கண்காட்சி, சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் அடுத்த மாதம் செப்டம்பர் 27,28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

மருத்துவத்துறையில் பல்வேறு நவீன தொழில்நுட்ப நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படுகிறது. சொந்த தொழில் துவங்க விரும்புவோருக்கு நிதி முதலீடு வாய்ப்புகள் இங்கு கிடைக்கும்.

இக்கண்காட்சியில் மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள்,யந்திரங்கள், நவீன தொழில்நுட்பம் பற்றி அறிய வாய்ப்புள்ளது.

மருத்துவ தொழில்நுட்பத் துறையில் 75% அளவு இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது இதில் முதலீடு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 10 ஆயிரம் மருத்துவமனைகள் இதில் பங்கேற்க உள்ளது என்று இந்த அமைப்பின் தலைவர் டாக்டர் விஜய் அகர்வால் தெரிவித்தார்.

மருத்துவமனைகளை மேம்படுத்த விரும்புபவர்களுக்கு இக்கண்காட்சி உதவியாக இருக்குமென்று பொதுச்செயலாளர் டாக்டர் லல்லு ஜோசப் தெரிவித்தார்.

இக்கண்காட்சியின் அமைப்பு செயலாளர் ஜே.ஏடெல், இந்த ஆண்டு சுயதொழில் துவங்கும் மருத்துவ கருவி நிறுவனங்களுக்கு முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களும் இதில் பங்கேற்கின்றன.

இந்த அமைப்பின் குழு தலைவர் சமீர் மேத்தா, விஜயா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மற்றும் இந்த அமைப்பு தமிழ்நாடு பிரதிநிதியுமான பாரதி ரெட்டி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *