செய்திகள்

சென்னை மாநகராட்சிக்கு தன்னார்வலர்கள் தாராளமாக பொருட்களை வழங்கலாம்

Spread the love

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகளுக்காக

சென்னை மாநகராட்சிக்கு தன்னார்வலர்கள் தாராளமாக பொருட்களை வழங்கலாம்

மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் வேண்டுகோள்

 

 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகளுக்காக பொருட்களை வழங்க விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு அமைப்புகள் கீழ்பாக்கத்திலுள்ள ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அண்ணா நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் அளிக்கலாம் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் இரயில் நிலையங்களில் வெளியூர் செல்ல இருந்த 1,727 பயணிகள் மாநகராட்சியின் சமுதாயக் கூடங்களிலும். சென்னையிலுள்ள வீடற்றோர் ஏற்கனவே 1,454 நபர்களும், தற்பொழுது கூடுதலாக 610 நபர்கள் என மொத்தம் 2,064 நபர்கள் மாநகராட்சி காப்பகங்களிலும் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும், சமுதாய கூடங்கள் மற்றும் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான பொருட்களை வழங்க ஆர்வமுள்ள தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மாநகராட்சியின் www. chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியில் covid-19. Volunteers Registration & NGO’s Registration என்ற இணைப்பில் தங்கள் விவரங்களை பதிவு செய்யவும், தங்களால் வழங்கக்கூடிய உபகரணங்கள், உதவிப்பொருட்கள் மற்றும் பொருட்களின் விவரங்களை 044 – 25384530 என்ற 24 மணி நேரம் இயங்கக்கூடிய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கும்மாறும் ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டது.

தன்னார்வ தொண்டு அமைப்புகள் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யவோ அல்லது பதிவு செய்வது தொடர்பான சந்தேகங்களை தெளிவுப்படுத்தவோ, பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்திற்குள் 14.04.2020 வரை வருவதை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

தன்னார்வ தொண்டு அமைப்புகள் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சானிட்டரி நாப்கின், சாம்பார்/ரசம் பொடி போன்ற அத்தியாவசிய திடப்பொருட்கள், முகக்கவசங்கள், கிருமிநாசினி, கைகளை சுத்தம் செய்யும் சோப்பு திரவம் மற்றும் லைசால் ஆகிய பொருட்களை கீழ்பாக்கம், எண்.82/1, விளையாட்டு திடல் தெருவிலுள்ள ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கத்திலும், அண்ணா நகர் கிழக்கு, ஏ பிளாக், 1வது தெரு, குமரன் நகரில் உள்ள அம்மா அரங்கத்திலும் வழங்கலாம்.

மேலும் நன்கொடை வழங்க விரும்புபவர்கள் பின்வரும் கணக்கு குறியீட்டு எண்ணில் அல்லது காசோலை மூலம் in favour of “THE COMMISSIONER, GREATER CHENNAI CORPORATION” என்ற பெயரிலும் அல்லது THE COMMISSIONER, GREATER CHENNAI CORPORATION, ACCOUNT NUMBER 000901126630. ICICI BANK NUNGAMBAKKAM BRANCH என்ற வங்கி கணக்கிலும் செலுத்துமாறும், மேலும், இது தொடர்பான விவரங்கள் அறிய 044-25384530 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கமிஷனர் கோ. பிரகாஷ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *