வாழ்வியல்

சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்கும் கற்றாழை

உலகம் முழுவதும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பில் கற்றாழை முக்கியப் பங்கு வகிக்கிறது. கற்றாழையில் உடலுக்குத் தேவையான முக்கியமான எட்டு அமினோ அமிலங்களான கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன.

வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்கலாம் . கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பொலிவடையும்.

கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப் பருவினால் ஏற்படும் ஒவ்வாமை நீங்கும். கற்றாழையின் சதைப் பகுதியை தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும்.

சதைப் பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும்.

நல்ல தூக்கம் வரும்.கண்களில் அடிபட்டாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.கற்றாழை ஜெல், கல் உப்பு, மோர் அல்லது தயிர் சேர்த்து, ஜூஸôகக் குடிப்பது பெண்களுக்கு நல்லது. இனப்பெருக்க மண்டலங்கள் ஒழுங்காக வளர, கற்றாழை உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதே சமயம் தினமும் கற்றாழை ஜூஸ் அருந்தக் கூடாது. வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *