செய்திகள்

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா

பீஜிங், ஜூன் 12–

சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவத் தொடங்கி உள்ளது.

சீனாவில் கடந்த 2019–ம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா பரவல் காரணமாக திணறி வரும்வேளையில் சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 22 பேருக்கு தொற்று உறுதியானது.

இது தவிர 27 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி குவாங்டாங் மாகாணத்தில் தொற்று பரவி வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 91,394 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *