வாழ்வியல்

சிவப்பு முட்டைக்கோஸிலுள்ள பல்வேறு மருத்துவ நன்மைகள்!

சிவப்பு மற்றும் நீல நிறப்பழங்கள், காய்கறிகளில் ரெஸ்வெரட்ரால் என்ற கிருமி நாசினி உள்ளது. சிவப்பு முட்டைகோஸை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு…

* ஆன்டி ஆக்ஸிடன்ட், ஃப்ரீராடிக்கல்களின் தாக்குதல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது.

* ஃப்ரீராடிக்கல்கள்தான் புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்கு முக்கியக் காரணம்.

* இதன் ஜூஸ் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறை போக்கி உடலின் நச்சுகளை நீக்கும்.

* இதில் உள்ள வைட்டமின் ஏ கண்புரை உருவாவதையும் தடுக்கும்.

* அல்சர், வயிற்றுப்புண் மற்றும் சிறுநீர்ப்பாதை தொற்று ஆகியவற்றை தடுக்கும்.

* கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும்.

* சிவப்பு முட்டைகோஸ் பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

* சிவப்பு நிற முட்டைகோஸில் இருக்கும் வைட்டமின் கே, மூளையை தாக்கும் அல்மைசர் நோயிலிருந்து பாதுகாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *