செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள்: செங்கல்பட்டு ஜான் லூயிஸ் வழங்கினார்

காஞ்சீபுரம், ஜூன் 16–-

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 87 பேர் மாமண்டூரில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து அந்த கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 18 பேருக்கு தனிமை காலம் நிறைவடைந்ததையடுத்து, மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் அங்கு சென்றார். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள், முகக்கவசங்கள், உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி பிரியா, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மதுராந்தகம் ஆர்.டி.ஓ லட்சுமி பிரியா, தாசில்தார் வேல்முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *