வாழ்வியல்

குழந்தைகளுக்கான ஆடை கலாச்சாரம்

நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுப்போம் என்பது பழமொழி. அதுபோல தான் குழந்தைகளிடம் சிறுவயதில் எதை விதைக்கிறோமோ அது தான் பின்பு அவர்களை உருவாக்குகிறது.

குழந்தையாய் இருக்கும் போது வயிறு, இடுப்பு தெரிய உடை உடுத்தினர். அதே உடையை 13 வயதுக்கு மேல் இருக்கும் போது அது தவறு என்று தெரியவதில்லை. அரைகுறை ஆடைகளோடு டிவி, சினிமாவில் பார்க்கும் போது குழந்தைகள் தாங்களும் அது போல் உடை அணிய வேண்டும் என அந்த கலாச்சாரத்துக்கு மாறி விடுகின்றனர்.

இந்த பழக்கம் பருவ வயதில் வரும் போதுதான் பிரச்சனையாகிறது. குழந்தைகளாக இருந்தபோது பழகிய பழக்க வழக்கத்தால் மங்கையாக மாறிய பிறகு ஆடை விலகுவது அறியாமல் இருக்கின்றனர். பெற்றோர்கள் அவர்களை கண்டிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.

சிறு வயதிலிருந்தே விதவிதமான உடைகளை வாங்கி அழகு பார்த்த பெற்றோர்கள், பின்பு அப்படிப்பட்ட உடைகளுக்கு தடை போடுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகையால் குழந்தைகள் பெற்றோர்கள் மீது வெறுப்புக் கொண்டு அவர்கள் சொல்வதை செய்ய மறுக்கின்றனர். சிறு வயதிலிருந்தே பெற்றோர் குழந்தைகளை கண்டுக்காமல் விட்டு விட்டு திடீரென அவர்களை கட்டுப்படுத்தும் போது அவர்களை வில்லன்களாக பார்க்கின்றனர்.

எந்த ஒரு பெண் தனக்கு வரும் காதல் கடிதத்தை தன் பெற்றோரிடம் ஒப்படைக்க தயங்கவில்லையோ, அவள் எப்போதும் தடம் மாறிப் போக மாட்டாள் என்று மன நல மருத்துவர்கள் சொல்கின்றனர். உடல் தெரியும் ஆடைகளை கேட்டு சிறு வயதில் குழந்தைகள் அடம் பிடித்தால் அதை விடவும் நல்லது பாவாடை சட்டையை காட்டி இது தான் உனக்கு அழகாய் இருக்கும் என்று ஆரம்பத்திலேயே அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

குழந்தைகளிடம் எது நல்லது எது கெட்டது என்பன போன்ற விஷயங்களைப் பேசினாலும் வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் இருக்கும்போது அறிவுரை வழங்காமல் கலந்துரையாடல் போல் கொண்டு சென்று புரிய வைக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் முழுமையாக அறிய முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் குழந்தைகளுக்கு மதிப்பை பெற்றுத்தரும் ஆடைவகைகளை அணிய கற்றுத்தர வேண்டியது அவசியம்.

குழந்தைகள், பெண்களுக்கான பல ஆடைகள், டிசைன்கள், வணிக உற்பத்திகள் பற்றிய அறிய கீழ்கண்ட வலைத்தளங்களை பாருங்கள்.

1) www.nift.gov.in 2) www.tn.gov.in/textiles 3) www.weavers serice society.com 4) www.nomadsclothing.com/fair trade 5) www.dir.indiamart.com/kids dresses 6) www.eastmen exports.com 7) www.chennaistore.com 8) www.theknot.com/fashion/flower girl dresses 9) www.612 league.com 10) www.maxfashion.in 11) www.fashonequation.com 12) www.beebayonline.com 13) www.firstcry.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *