செய்திகள்

குடியரசுத் தலைவரின் 76வது பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

புதுடெல்லி, அக். 1–

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 76வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘தனது பணிவான ஆளுமையால் ஒட்டுமொத்த தேசத்தாலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேசிக்கப்படுகிறார். ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அவரின் முயற்சி போற்றத்தக்கது’ என குறிப்பிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

குடியரசுத் தலைவருக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் தலைவர் கலைஞர் படத்திறப்பு விழாவின்போது தாங்கள் காட்டிய அன்பும் அக்கறையும் என் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *