செய்திகள்

காஞ்சிபுரம் அத்திவரதர் ஆசி பெற பக்தர்களுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வேண்டுகோள்

Spread the love

காஞ்சிபுரம், ஜூலை 1–

காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில் ‘ஸ்ரீஆதி அத்திவரதர்’ அனந்தசரஸ் எனும் திருக்குளத்தின் நீருக்கு அடியில் இருந்து 40 வருடங்களுக்கு பிறகு வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் மழை பொழிய உள்ளார்.

இவ்விழா 1979–ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடைபெற்றது. தற்போது புரட்சித்தலைவி அம்மாவின் அருளாசியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் தற்போது நடைபெற உள்ளது. இவ்விழா 1.7.2019 முதல் 17.8.2019 வரை நடைபெற உள்ளது. புரட்சித்தலைவி அம்மாவின் அருளாசியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நல்லாட்சியில், ஸ்ரீ அத்திவரதரை தரிசித்து ஸ்ரீஆதி அத்திவரதர் ஆசி பெற அனைத்து பக்தர்களையும் அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *