செய்திகள்

கண்டமங்கலம், கோலியனூர் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக்: அமைச்சர் சி.வி. சண்முகம் துவக்கினார்

விழுப்புரம் மாவட்டம்

கண்டமங்கலம், கோலியனூர் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக்:

அமைச்சர் சி.வி. சண்முகம் துவக்கினார்

ரூ. 77 லட்சம் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

விழுப்புரம், பிப். 21

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் மற்றும் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் திறந்து வைத்து, ரூ.77.42 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பூமி பூஜை மூலம் துவக்கி வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் வசிக்கும் ஏழை எளிய பாமர மக்கள் நல்ல சிகிச்சை பெற வேண்டும் என்பதற்க்காக ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என அறிவித்தார். இத்திட்டத்தினை உடனடியாக செயல்படுத்தி தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புவரசன்குப்பம் ஊராட்சியிலும், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பில்லூர், சேர்ந்தனூர், சாலை அகரம், கப்புர் ஊராட்சிகளிலும் மற்றும் விழுப்புரம் நகராட்சி காகுப்பம் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தினையும் வழங்கினார்.

தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் சேர்ந்தனூர் ஊராட்சியில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மாநில நிதிக்குழு மான்ய நிதி திட்டத்தின் கீழ் ரூ.16.21 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும், பில்லூர் ஊராட்சியில் ரூ.29.85 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, காத்திருப்போர் கூடம், கைப்பம்பு அமைக்கும் பணியினையும், சாலை அகரம் ஊராட்சியல் ரூ.20.74 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும், கப்புர் ஊராட்சியில் ரூ.10.62 லட்சம் மதிப்பீட்டில் கப்புர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி என மொத்தம் ரூ.77.42 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் பூமி புஜை மூலம் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, வானூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சக்ரபாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வெ.மகேந்திரன், வேளாண் விற்பனைக்குழு தலைவர் எல்.கே.கண்ணன், மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பசுபதி, மாவட்ட ஆவின் தலைவர் பேட்டை வி.முருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *