செய்திகள் வர்த்தகம்

ஐக்யூஓஓ நிறுவனத்தின் புதிய இசட்5 ரக மொபைல் அறிமுகம்

சென்னை, அக்.1–

ஐக்யூஓஓ செல்போன் நிறுவனம் தனது புதிய இசட்5 ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இளம் தலைமுறையினர் விரும்பும் இணையற்ற செயல்திறனுடன் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

இந்த புதிய ஐக்யூஓஓ இசட்5 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 778ஜி 5ஜி மொபைல் இயங்கு தளம் மற்றும் எல்பிடிடிஆர்5 ரேம் மற்றும் யுஎப்எஸ் 3.1 பிளாஷ் மெமரி, 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் பிளாஷ் சார்ஜர் மற்றும் 64எம்பி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான பிரதான கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கேம் பிரியர்களுக்கு ஏற்ற 4டி கேம் வைப்ரேஷன், லீனியர் மோட்டார், ஹை-ரெஸ் ஆடியோ, இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் வெப்பத்தை குறைப்பதற்கான லிக்விட் கூலிங் டெக்னாலஜி ஆகியவை உண்மையிலேயே அதிவேக மற்றும் நீண்ட நேரம் கேம் விளையாடுவதற்கான சிறந்த அனுபவத்திற்கு உறுதி அளிக்கிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இளம் தலைமுறையினருக்கு புதிய அனுபவத்தை வழங்க சிறப்பான செயல்திறனைக் கொண்டுள்ளது.

இது ஐக்யூஓஓ ஆன்லைன் -ஸ்டோரில் அக்டோபர் 3-ந்தேதி முதல் 8ஜிபி + 128ஜிபி மாடல் 23,990 ரூபாய்க்கும் 12ஜிபி + 256ஜிபி மாடல் 26,990 ரூபாய்க்கும் கிடைக்கும் என்றுஐக்யூஓஓ நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ககன் அரோரா தெரிவித்தார்.இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான 64 எம்பி பிரதான கேமரா, 8எம்பி வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா ஆகிய 3 பின்புற கேமராக்கள் உள்ளன. பிரதான 64எம்பி கேமரா செயல்படுகிறது. இதன் காரணமாக நீங்கள் எந்த சூழ்நிலையில் படத்தை எடுத்தாலும் இதில் உள்ள தொழில்நுட்பம் அதை தானாகவே சரியான புகைப்படமாக மேம்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *