செய்திகள்

உங்களின் ஓட்டுச் சாவடி எண் என்ன? எங்கே இருக்கிறது? மொபைல் மூலம் கண்டறிய ஏற்பாடு

புதுடெல்லி, ஏப்.11

உங்களின் ஓட்டு எந்த ஓட்டுச்சாவடி வரையறைக்குள் வருகிறது, ஓட்டுச்சாவடி எண் ஆகியவற்றை இருந்த இடத்திலேயே அறிந்து கொள்ள தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. ஆன்லைன் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் என 2 வழிகளில் ஓட்டுச்சாவடியை தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் ஓட்டுச்சாவடியை கண்டறிய

தேசிய வாக்காளர் சேவை மையத்தின் (National Voters’ Services Portal (NVSP)) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்; அதில் குடிமக்கள் தகவல் (Citizen Information) என்ற வசதியை கிளிக் செய்து, உள்ளே செல்லவும். உங்களின் பெயர், தந்தை அல்லது கணவரின் பெயர் மற்றும் மாநிலத்தை பதிவிட வேண்டும்.

அதில் தோன்றும் கேப்சா கோடினை பதிவிட வேண்டும். இப்படி செய்த பின் உங்களின் ஓட்டுச்சாவடி எண் மற்றும் பல விபரங்கள் உங்கள் திரையில் தோன்றும்.

எஸ்எம்எஸ். ல் ஓட்டுச்சாவடியை கண்டறிய, உங்கள் மொபைல் போனில் EPIC என டைப் செய்து, சிறிது இடைவெளி விட்டு, உங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை எஸ்எம்எஸ்., ஆக டைப் செய்ய வேண்டும்;

இந்த எஸ்.எம்.எஸ். ஐ 51969 அல்லது 166 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்; சில நிமிடங்களிலேயே உங்களின் மொபைல் போனிற்கு உங்கள் பெயர், ஓட்டுச்சாவடி எண், அது இருக்கும் இடம் உள்ளிட்ட விபரங்கள் எஸ்.எம்.எஸ். ஆக அனுப்பப்படும் என்று தேர்தல் கமிஷன் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *