ஈரோடு, ஜன. 27–
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுவார். இவர் எங்கள் கட்சியின் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.
எங்கள் கட்சி சார்பில் 290க்கும் மேற்பட்டோர் தேர்தல் பணிகுழுவில் இடம்பெற்றுள்ளனர். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.