செய்திகள்

இருமல் மருந்தில் கலப்படம்: உ.பி. நிறுவனத்தில் 5 பேர் கைது

லக்னோ, மார்ச் 4–

இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் உற்பத்தி நிறுவனத்தைச் சேர்ந்த 3 ஊழியர்கள் 2 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் செயல்படும் ‘மேரியன் பயோடெக்’ என்ற நிறுவனத்தின் தயாரிப்பான ‘டோக்-1 மேக்ஸ்’ என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியது. சம்பந்தப்பட்ட இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டதுடன், மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

5 பேர் கைது

மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலீன் கிளைக்கால் வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், ‘மேரியன் பயோடெக்’ நிறுவனத்தின் ஊழியர்கள் 3 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இந்நிறுவனத்தின் இயக்குநர்களான ஜெயா ஜெயின், சச்சினி ஜெயின் ஆகிய இருவர் மீதும் மருந்து தயாரிப்பில் முறைகேடு, மருந்துகளை மாற்றி விற்பனை செய்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

நொய்டாவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் ‘டோக்-1 மேக்ஸ்’ என்ற இருமல் மருந்தின் மாதிரிகள் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி 12ஆம் தேதி பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 22 மாதிரிகளில் தரம் குறைந்து இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்திய தயாரிப்பு இருமல் மருந்தால் 70 குழந்தைகள் உயிரிழந்ததாக கடந்த அக்டோபரில் சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *