செய்திகள்

இந்தியாவில் 40 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, மார்ச் 19

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 154 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கட்டுப்பாட்டுக்குள் வந்த கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. 10 ஆயிரத்துக்குள் இருந்து வந்த தினசரி பாதிப்பு இப்போது மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 39 ஆயிரத்து 726 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகி இருக்கிறது.

கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலியும் தொடர்ந்து 100-ஐ கடந்து செல்கிறது. நேற்று 172 பேர் இறந்த நிலையில் இந்த எண்ணிக்கை இன்று சற்றே குறைந்து 154 ஆக பதிவாகி இருக்கிறது.

இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 370 ஆக உயர்ந்து இருக்கிறது.

நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 654 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை மீட்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சத்து 83 ஆயிரத்து 679 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 2 லட்சத்து 71 ஆயிரத்து 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 3.93 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *