புதுடெல்லி, ஏப். 23–
இந்தியாவில் மேலும் 2,527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; – இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15079 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 1,656 பேர் குணம் அடைந்தனர். குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 16 ஆயிரத்து 68லிருந்து 4 கோடியே 25 லட்சத்து 17 ஆயிரத்து 724 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 187.46 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 84 லட்சத்து 29 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 13 லட்சத்து 64 ஆயிரத்து 158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 46 கோடியே 08 லட்சத்து 25 ஆயிரத்து 541 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 39 ஆயிரத்து 987 பேர் உயிரிழந்துள்ளனர்.