வர்த்தகம்

இந்தியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனராக சாந்திலால் ஜெயின் பதவி ஏற்பு

வங்கிப் பணியில் 25 ஆண்டு அனுபவம்

சென்னை, செப்.4–

முதுகுத்தண்டில் வளைவு (ஸ்கோலியோசிஸ்) என்பது குழந்தைகளிடம் எந்தவொரு வயதிலும் அவர்களது முதுகுத்தண்டில் உருவாகக்கூடிய ஒரு வளைவாகும்.ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில், நுரையீரல் நோய், வாழ்க்கையின் மோசமான தரம், நடப்பதில் சிரமம் மற்றும் உடல் செயல்பாடுகளின்போது கடுமையான முதுகுவலி போன்ற சிக்கல்களுக்கு இப்பாதிப்பு நிலை வழிவகுக்கக்கூடும்.

சென்னை வாலண்ட்டரி ஹெல்த் சர்வீசஸ் மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளாக ஸ்கோலியோசிஸ் நோயால் அவதியுற்று வந்த 15 வயது ஆன, இளம் பெண்ணிற்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த இளவயது சிறுமிக்கு முதுகு கூனல் உருவானது. நேராக படுக்கவோ, தடங்கலின்றி நடக்கவோ இயலவில்லை.அத்துடன், சுவாசிப்பதிலும் பிரச்சனைகள் இருந்தன. அந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு நம்பிக்கை உணர்வை நாங்கள் வழங்கினோம்,” என்று விஹெச்எஸ் மருத்துவமனையின் எலும்பியல் மருத்துவரும் மற்றும் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர். விக்னேஷ் புஷ்பராஜ் கூறினார்.

முதுகு தண்டு வளைவு பாதிப்பு இந்நோயாளிக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது மற்றும் வளைவை சரிசெய்வதற்கான அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து நடந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு இரண்டு நாட்களுக்குள்ளேயே இந்நோயாளியால் இயல்பாக நடக்க முடிந்தது. பிணைச்சட்டம் அணிவது ஒரு விருப்பத் தேர்வாக இருக்கவில்லை.இன்றைய காலகட்டத்தில் மருத்துவத்துறையில் செயல்பாட்டிற்கு வந்திருக்கும் மிக நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக, ஸ்கோலியோசிஸ் போன்ற பாதிப்பு நிலைகளுக்கு அந்தந்த நோய் தீவிரத் தன்மையின் அடிப்படையில் மிகக்குறைவான சிக்கல்களோடு அல்லது சிக்கல்களே இல்லாமல் திறம்பட சிகிச்சையளிக்கப்பட்டது என்று டாக்டர். விக்னேஷ் புஷ்பராஜ் தெரிவித்தார்.

மிக ஆரம்ப நிலையிலேயே இப்பாதிப்பு நிலை கண்டறியப்படுமானால், அறுவைசிகிச்சையின் துல்லியமும், வெற்றியும் மிக அதிகமாக இருக்கும்.

இதற்கு -98847 30000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *