செய்திகள்

இந்தியன் ஆயில் ஆராய்ச்சி மையம் 1000 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்று சாதனை

சென்னை, மே. 8 –

இந்தியன் ஆயில் ஆராய்ச்சி மையம் பரிதாபாத் நகரில் செயல்படுகிறது. பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, உலகளவில் அங்கீகாரம் பெற்ற காப்புரிமை (பேடண்ட்) பெற்று சாதனை படைத்துள்ளது என்று சேர்மன் சஞ்சீவ் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இதுவரை 1001 காப்புரிமைக்கு பதிவு செய்துள்ள இந்தியன் ஆயில், இதில் 542 காப்புரிமைகள் வெளிநாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. 252 இந்தியாவில் வழங்கப்பட்டது. இத்துடன் இல்லாமல் கண்டுபிடிப்புகளை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்யும் திட்டம் உலகளவு சராசரியை விட அதிகமாக இந்தியன் ஆயில் சாதித்துள்ளது என்றார் சஞ்சய் சிங்.

இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு ஆலைகளில் பல்வேறு நவீனப்படுத்தும் வசதிகளில் இதன் ஆராய்ச்சி வசதி உதவியுள்ளது ‘பி.எஸ்.4’ பெட்ரோல் தரம் உற்பத்திக்கும் ஆராய்ச்சி மையம் உதவி உள்ளது என்றார் அவர்.

இந்தியன் ஆயில் கண்டுபிடித்த ‘இண்ட்மேக்ஸ்’ தொழில்நுட்பம், சுத்திகரிப்பு ஆலையில், கூடுதல் கேஸ் பெற உதவியது.

இதன் ஆராய்ச்சியில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் கம்பிரஸ்ட் பயோ கேஸ் ஆலை நிறுவப்பட்டு, மீத்தேன் கேஸ் பெறுவதில் முன்னிலையில் உள்ளது.

சர்வே மசகு எண்ணை நவீனமயமாக்கப்பட்டு 5000 ரக ஆயில், 800 விதமான ரகங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இது இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஆயிலாக உள்ளது.

இது கண்டுபிடித்த 100 ‘நூடன்’ கெரசின் சிக்கன ஸ்டவ், அனைவரையும் கவர்ந்தது. பாமர மக்களுக்கும் இந்த தொழில்நுட்பம் உதவியது என்று இந்தியன் ஆயில் ஆராய்ச்சி பிரிவு டைரக்டர் எஸ். எஸ். வி. ராம்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *