செய்திகள்

இடைக்கால அரசு என் தலைமையில்தான் அமையும்: மகிந்த ராஜபக்சே

கொழும்பு, ஏப். 24–

“இடைக்கால அரசை நான்தான் அமைப்பேன்; பேச்சு நடத்த விரும்பாவிட்டால் போராடட்டும்” என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆணவமாகப் பேசியுள்ளது மக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரியும், தற்போதைய அரசைக் கலைத்து விட்டு அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கவும் கோரி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சகித்துக் கொள்ள வேண்டும்

இது குறித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறியதாவது:–

மாறுபட்ட கொள்கைகளுடன் இருப்பவர்கள், நேருக்கு நேர் பார்க்கக் கூட விரும்பாதவர்கள் ஒன்றுசேர்ந்து இடைக்கால அரசு அமைத்தால் என்ன பலன் இருக்கும். அவர்களிடம் ஒருமித்த கருத்து ஏற்பட வாய்ப்பில்லை. ஒருவேளை இடைக்கால அரசு தேவையெனில், அது என் தலைமையில் தான் அமையும்.

மக்கள் பொருளாதார நெருக்கடியை சகித்துக் கொண்டு பொறுமை காக்க வேண்டும். அரசுடன் பேச்சு நடத்த விரும்பவில்லையெனில் பொதுமக்கள் தொடர்ந்து போராடட்டும் என்று மகிந்த ராஜபக்சே ஆணவமாகப் பேசியுள்ளார். இந்தப் பேச்சு போராட்டக்காரர்களிடம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.