செய்திகள்

ஆந்திரத்தில் பெரு வெள்ளம்: 17 பேர் பலி; 100 பேர் மாயம்

ஐதராபாத், நவ. 20–

ஆந்திர மாநிலம் ராயலசீமாவின் 4 மாவட்டங்களாக சித்தூர், கடப்பா, கர்னூல் மற்றும் அனந்த்பூரில் கொட்டிய மழையால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் பலியாகி உள்ள நிலையில் 100 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் சித்தூர், கடப்பா, கர்னூல் மற்றும் அனந்த்பூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதலாக கொட்டத் தொடங்கிய வெள்ளம் காரணமாக, திருப்பதி திருமலை கோயில் மற்றும் மலைப் பகுதிகளை காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் சூழ்ந்துகொண்டது. இது தொடர்பாக விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17 பேர் பலி

மேலும் இதுவரை வரலாற்றில் காணாத அளவுக்கு, திருமலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சாலைகளில் பேருந்துகளும் கார்களும் அடித்துச் செல்வதையும் காண முடிந்தது. இந்த வெள்ளத்தில் நான்கு மாவட்டங்களிலும் 17 பேர் பலியாகியிருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கும் அபாயமிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 7 குழுவினர், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த மூன்று பேருந்துகள், ராமாபுரம் அருகே கடும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அதிலிருந்த பயணிகளை மீட்டனர். எனினும், 12 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவர்கள் பல்வேறு பகுதிகளிலு சடலமாக மீட்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *