செய்திகள்

அலகாபாத் வங்கியில் வர்த்தகம் உயர்ந்தது; வராக்கடன் குறைந்தது

சென்னை, பிப்.8–

பொதுத்துறையைச் சேர்ந்த அலகாபாத் வங்கி, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ரூ.733 கோடியை நிகர இழப்பாகக் கண்டுள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.1,264 கோடியாக இருந்தது. ஆக, இவ்வங்கியின் இழப்பு கணிசமாக குறைந்துள்ளது.

இதே காலத்தில் இவ்வங்கியின் மொத்த வருவாய் (ரூ.4 ஆயிரத்து 755 கோடியில் இருந்து) ரூ.4 ஆயிரத்து 757 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த வராக்கடன் (14.38 சதவீதத்தில் இருந்து) 17.81 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனினும் நிகர வராக்கடன் (8.97 சதவீதத்தில் இருந்து) 7.70 சதவீதமாக குறைந்துள்ளது. வராக்கடன் ஒதுக்கடு (ரூ.2,044 கோடியில் இருந்து) ரூ.1,900 கோடியாக குறைந்து இருக்கிறது.

அலகாபாத் வங்கியில் வராக்கடன் நிகரம் 7.96% லிருந்து 7.70% ஆக குறைந்தது. இதன் மொத்த சில்லறை கடன் அளவு 26.11% அதிகமாகி ரூ.19 ஆயிரத்து 599 கோடியாக உயர்ந்தது. வீட்டுவசதி கடன் ரூ.2 ஆயிரத்து 924 கோடி வழங்கி உள்ளது. சேர்ந்துள்ள மொத்த வீட்டு வசதி கடன் தொகை 29.88% அதிகமாகி 14 ஆயிரத்து 334 கோடியாக உயர்ந்துள்ளது.

ஸ்டேட் வங்கி இன்சூரன்ஸ் கூட்டுடன் ஆயுள் இன்சூரன்ஸ் திட்டங்களை இதன் கிளைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டேட் வங்கி கூட்டுடன் கிரெடிட் கார்டு வழங்க உள்ளது.

நலிவுற்ற பிரிவினர்களுக்கு ரூ.67 ஆயிரத்து 460 கோடி கடன் வழங்கி உள்ளது. விவசாய கடனாக ரூ.27 ஆயிரத்து 521 கோடி வழங்கி உள்ளது. என்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ்.மல்லிகார்ஜூனராவ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *