செய்திகள்

அமெரிக்கா சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம பெண் சுட்டு கொலை

ஹூஸ்டன், பிப்.12–

சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம பெண் சுட்டு கொலை

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 3700 சவுத்வெஸ்ட் பிரீவே என்ற பகுதியில் ஜோயல் ஆஸ்டீன் லேக்வுட் என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் (சர்ச்) ஒன்று உள்ளது. இந்த ஆலயம் நகரில் மக்கள் பரவலாக கூடும் மற்றும் அதிக பரபரப்பு நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. 6 மைல்கள் பரப்பளவில் அமைந்த மிக பெரிய ஆலயம் ஆகும்.

இந்நிலையில் ஆலயத்திற்கு 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் குழந்தை ஒன்றுடனும், மற்றொரு கையில் துப்பாக்கியுடனும் நுழைந்துள்ளார். அவர் ஆலயத்தில் நுழைந்ததும் துப்பாக்கியால் சுட தொடங்கினார்.

இதனால் பிரார்த்தனைக்காக கூடியிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் உடனடியாக அவரை நோக்கி சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிரிழந்தார். துப்பாக்கி சூட்டில் அவருடைய கையில் இருந்த 5 வயது குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த 57 வயதுடைய நபர் ஒருவரும் காயமடைந்தார். உடனடியாக குழந்தை மற்றும் அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதுபற்றி ஹூஸ்டன் நகர போலீஸ் அதிகாரி கூறுகையில், போலீசார் சுட்டதில் சம்பவ பகுதியிலேயே அந்த பெண் மரணமடைந்து விட்டார். குழந்தை மற்றும் ஆண் நபரையும் துப்பாக்கியால் சுட்டது யாரென்ற விவரம் தெரியவில்லை. இந்த துப்பாக்கி சூட்டிற்கான பின்னணி மற்றும் குழந்தைக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்று விவரம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *