செய்திகள்

அமெரிக்காவில் டிக் டாக், விசாட் உள்ளிட்ட செயலிகளுக்கான தடை நீக்கம்

வாஷிங்டன், ஜூன் 10–

அமெரிக்காவில் டிக் டாக், விசாட் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களுக்கு டிரம்ப் விதித்த தடை உத்தரவை, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் திரும்ப பெற்றார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டிக் டாக், விசாட் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களுக்கு முன்னாள் அதிபர் டிரம்ப் விதித்த தடை உத்தரவை, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் திரும்ப பெற்றுள்ளார். மேலும் ஒரு திறந்த, நம்பகமான மற்றும் பாதுகாப்பான இணையத்தை ஊக்குவிப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. மனித உரிமைகளை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பாதுகாப்பதை விரும்புகிறது. அத்துடன், உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தையும் ஆதரிக்கிறது.

சீன மென்பொருள் பயன்பாட்டால் தேசிய பாதுகாப்புக்கு அபாயம் உள்ளதா? என்பதை அடையாளம் காணும் நோக்கில் அமெரிக்கா சொந்த மதிப்பாய்வை மேற்கொள்ளும். பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டும் செயலிகள், சீன ராணுவம் அல்லது உளவுத்துறை நடவடிக்கைகளுடன் தொடர்புடையனவா என்பது பற்றிதான் அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர்.

அமெரிக்கர்களின் மரபணு மற்றும் தனிப்பட்ட சுகாதார தகவல்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து வர்த்தகத்துறை பரிந்துரை வழங்கும். இவ்வாறு அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *