செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் 67 பேருக்கு உதவித்தொகை ஆணை: கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்

Spread the love

விழுப்புரம்,செப்.11-

விழுப்புரத்தில் நடைபெற்ற மாற்றுமாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு சிறப்பு முகாமில் 67 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் வயது தளர்வு செய்து மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்கக் கோரி வரப்பெற்ற மனுக்களில் தகுதியான நபர்களை மருத்துவ அலுவலர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து கலெக்டர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்பேரில் இன்றைய தினம் விழுப்புரம் மற்றும் திண்டிவனம் கோட்டங்களுக்கு உட்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளர்வு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பரிசோதனையினை மருத்துவர்கள் குழு மூலம் செய்யப்பட்டு உதவித்தொகை வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது. அதற்குரிய ஒப்புதல் அளிக்கப்பட்டு உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும். இந்த முகாமில் விழுப்புரம் மற்றும் திண்டிவனம் கோட்டத்திற்கு உட்பட்ட 67 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இம்முகாமில் 18 வயதிற்கு உட்பட்ட வயது தளர்வு செய்து மாற்றத்திறனாளி உதவித்தொகை வழங்கக் கோரி வரப்பெற்ற 221 மனுக்களில் தகுதியான 67 நபர்கள் மருத்துவ அலுவலர்கள் மூலம் தேர்வு செய்து, கலெக்டரால் வயது வரம்பு தளர்வு செய்து ஆணையிடப்பட்டது. மேலும், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 17.9.2019 அன்று 18 வயதிற்கு உட்பட்ட வயது தளர்வு செய்து மாற்றத்திறனாளி உதவித்தொகை வழங்கும் முகாம் நடைபெறும் என்றும் அதில் 154 நபர்களுக்கு வயது தளர்வு ஆணை வழங்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகிருஷ்ணமூர்த்தி, தனித்துணை ஆட்சியர் அம்புரோஸியா நேவிஸ்மேரி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஆர்.பாலசுந்தரம், வருவாய் வட்டாட்சியர் கணேஷ், தனிவட்டாட்சியர் ஆனந்தன், தலைமை உதவியாளர் மணிமேகலை, மருத்துவர் ஆர்.சதாவெங்கடேஷ், திண்டிவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் எஸ்.சீனிவாசன், விழுப்புரம் அரசு மருத்துவமனை உதவி மருத்துவர் ரகுநாத், உதவி மருத்துவர் ஆனிமேரி, விழுப்புரம் கோட்டம் மற்றும் திண்டிவனம் கோட்டத்தைச் சேர்ந்த அனைத்து சமூகபாதுகாப்பு தனி வட்டாட்சியர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *