செய்திகள் வாழ்வியல்

திருச்சி நெடுங்குளம் திருநெடுங்களநாதர் நித்திய சுந்தரேஸ்வரர் கோவில்

அருள்மிகு திருநெடுங்களநாதர் நித்திய சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நெடுங்குளம் திருச்சி மாவட்டம். இந்தத் திருக்கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 8–வது தலமாக உள்ளது.

இங்குள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் ஒவ்வொரு ஆடி மாதம் 7–ம் தேதி முதல் 12–ம் தேதி வரை காலை 6 மணி முதல் 6.15 நிமிடம் வரை சூரிய ஒளி மூலவர் மீது படுகிறது. சிவனின் தேவாரப்பாடல் சிவாலயங்களில் இது 71 ஆயிரத்து திருத்தலமாகும். இந்த திருக்கோவிலில் 2 பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது. கோவில் முதல் நுழைவாயில் கோபுரம் இல்லை. 2–வது வாயிலில் அழகிய சிற்பங்கள் கொண்ட சிறப்பான கோபுரம் இருக்கிறது.

உள்ளே உள்ள பிரகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர் சந்திரசேகர் ஆகியோருடைய சன்னதிகள் உள்ளன. தென் பிரகாரத்தில் சப்த கன்னியர்களும் தட்சிணாமூர்த்தியும் ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதி அழகாக உள்ளது.

மேற்கு பிரகாரத்தில் தெய்வானையுடன் முருகப் பெருமானுக்கு தனிசன்னதி உள்ளது. இதன் எதிரே அகஸ்தியர் தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் எப்பொழுதும் நீர் வற்றாமல் உள்ளது சிறப்பான அம்சமாகும். வெளிப்பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் ஒரு திருக்கல்யாண மண்டபம் அம்பாள் சன்னதியும் அழகாக இருக்கின்றன.

குழந்தை பாக்கியம் பெறவும் திருமணத்தடை நீங்கவும் கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வந்து இந்த சிவபெருமானை வணங்கினால் நிச்சயம் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். சிவபெருமான் தனக்கு இடப்பாகத்தில் சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக விளங்கும் ஈசன் திருச்சி நெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி இருந்து அருள்பாலிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக கருதுகின்றனர்.

திருநெடுங்குளம் என்பதன் பொருள் “சமவெளியில் அமைந்த பெரிய ஊர்” என்று பொருள் ஆகும். அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்ததாகவும் பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடித்தார் என்பதும் இங்கு கூறப்படுகிறது.

இங்கு முக்கிய விழாக்களாக பிரதோஷ வழிபாடு, நடராஜருக்கு ஆறு கால பூஜை, நால்வருக்கும் அவரவருக்குரிய நட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுவது ஆகும். ஆடிவெள்ளியில் சிறப்பு பூஜையும் செய்யப்படுகின்றன. தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் திறந்து உள்ளது. அருள்மிகு திருநெடுங்களநாதர் திரு நித்திய சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருநெடுங்குளம் – 620 015 திருச்சி மாவட்டம். தொலைபேசி எண் 0431_2520126,2510241, 9965045666

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்

பிறை உடையாய் பின்னே என்று உன்னை பேசினால்

குறை உடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த

இறை உடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *