செய்திகள்

அசாம், மேற்குவங்க மாநிலத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு

சென்னை, மார்ச் 26– அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நாளை முதல்கட்டமாக 77 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில், 8 கட்டங்களாக நடைபெற உள்ள தேர்தலில், முதல் கட்ட தேர்தல், 30 சட்டசபை தொகுதிகளில் நாளை நடை பெறுகிறது. […]

செய்திகள்

தி.மு.க.வினர் அபகரித்த 14 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்பு

தி.மு.க. மக்களுக்கான கட்சி அல்ல; அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி ஆட்சிக்கு வந்தால் கடைகடையாக சென்று வசூல் செய்வார்கள் யாரையும் நிம்மதியாக வாழவிட மாட்டார்கள் கரூரில் எடப்பாடி பேச்சு கரூர், மார்ச் 24– தி.மு.க.வினர் ஆட்சியில் இருந்த போது அபகரித்த 14 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அம்மா மீட்டு உரியவர்களிடம் கொடுத்தார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தி.மு.க. ஒரு கட்சியே அல்ல; அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி; ரவுடி கட்சி என்று அவர் கடுமையாக […]

செய்திகள்

இறுதி வேட்பாளர்கள் யார்? பட்டியல் நாளை வெளியீடு

சென்னை, மார்ச் 21– தமிழக சட்டமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்த இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது. தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் தாக்கல் செய்யப்பட்ட 7,238 மனுக்களில் 1,855 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 2000 க்கும் மேற்பட்ட மனுக்கள் பரிசீலனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 3,003 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நாளை வேட்புமனுக்களை திரும்ப […]

செய்திகள்

3 பாஜக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

திருவனந்தபுரம், மார்ச் 21– கேரளாவில், பாஜக, அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 3 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தமிழகத்துடன் சேர்ந்து கேரள மாநில சட்டப்பேரவைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு போட்டியிட வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்துள்ளது. அப்போது உரிய ஆவணங்கள் இல்லாததால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் மூவரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரி தொகுதியில் பாஜக வேட்பாளராக ஹரிதாஸ் என்பவர் களமிறக்கப்பட்டார். ஹரிதாஸின் வேட்பு மனுவில் தேசிய பாஜக […]

செய்திகள்

தபால் வாக்கு கட்டாயமல்ல: தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை, மார்ச் 15– மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றுள்ளவர்கள் விருப்பத்தின் பேரிலேயே தபால் வாக்கு அளிக்கலாம் என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நேற்று வெளியிட்ட அறிக்கையில், 2021ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் கொரோனா தொற்று உள்ளவர்கள் அல்லது நோய்த் தொற்று இருக்கலாம் என […]

செய்திகள்

தமிழகத்தில் நடந்த சோதனையில் இதுவரை ரூ.100 கோடி தங்கம், ரொக்கம் பறிமுதல்

சென்னை, மார்ச்.14- தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை நடைபெற்ற சோதனையில் ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கம், பொருட்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், […]

செய்திகள்

வேட்பாளர் தேர்வில் குளறுபடிகள்

– சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.பி. திடீர் உண்ணாவிரதம் சென்னை, மார்ச் 13– காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருப்பதாக கூறி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காங்கிரஸ் எம்.பி. டாக்டர் விஷ்ணு பிரசாத் தலைமையில் காங்கிரசார் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர். தி.மு.க. கூட்டணியில் 25 இடங்களை மிகப்பெரிய இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் பெற்றது. போராடி பெற்ற இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் மிகப்பெரிய போராட்டம் நடக்கிறது. காங்கிரசை பொறுத்தவரை கட்சியை விட கோஷ்டிகளே […]

செய்திகள்

தி.மு.க. தேர்தல் அறிக்கை: கவர்ச்சி திட்டங்களை அறிவித்தார் ஸ்டாலின்

சென்னை, மார்ச் 13– தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையை இன்று மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். தி.மு.க. போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன என்று ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து அவர் தேர்தல் அறிக்கையை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:– திருக்குறளை தேசிய நூலாக […]

செய்திகள்

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை: நாளையும் சிறப்பு முகாம்

சென்னை, மார்ச் 13– மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6 இல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தத்தில் புதியதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் (படிவம்-6) தனிப்பட்ட தொலைபேசி எண் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்குரிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை (e-EPIC) NVSP (https://www.nvsp.in) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2021ன் போது, […]