சென்னை, மார்ச் 1
வி.ஐ.டி. ஆந்திர பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் அல்லாமல் இதர கலை, அறிவியல், வணிகவியல் சட்ட படிப்புகளான பிபிஏ, சட்டம், பி.காம், பி.எஸ்சி, பி.ஏ, பட்டப்படிப்புகளில் சேரும் ஏழை சாதனை மாணவர்களுக்கு உதவ ஜிவி மெரிட் உதவித் தொகை மற்றும் ராஜேஸ்வரி அம்மாள் மெரிட் உதவித் தொகை வழங்கப்படும் என்று இந்த பல்கலைக்கழக துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் தெரிவித்தார்.
இந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.வி.கோட்டா ரெட்டி பேசுகையில், நாடு முழுவதும் உள்ள எந்த கல்வி வாரியத்திலும் தேர்வு செய்யப்பட்ட சாதனை மாணவர்கள் இதில் சேர்ந்து உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு அனைத்து ஆண்டுகளிலும் 100% மெரிட் உதவித் தொகையாக கிடைக்கும் என்றார்.
வி.ஐ.டி.யில் இது தவிர ஏற்கனவே ‘ஸ்டார்ஸ்’ சாதனை மாணவர் உதவித் தொகை திட்டமும் உள்ளது.
சி.எல்.வி.சிவகுமார் பேசுகையில், ராஜேஸ்வரி அம்மாள் மெரிட் உதவித் தொகைக்கு விண்ணப்பதாரர் எந்தவொரு மாநிலத்திலும் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்தவராக இருக்க வேண்டும்.
இவர் கல்லூரி கட்டணத்தில் 50% உதவித் தொகை அனைத்து கல்வி ஆண்டிலும் பெற தகுதி பெற்றவர் ஆவார்.
மாவட்ட அளவில் சாதனை படைத்தவர் மாணவியாக இருந்தால் கூடுதலாக 25% சேர்த்து மொத்த கட்டணத்தில் 75% உதவித் தொகையாக பெறலாம்.
பொது நிர்வாகத்தில் பிபிஏ படிப்பு மற்றும் சிறப்பு படிப்பு திட்டங்களாக பிசினஸ் அனலிடிக்ஸ், பின்டெக், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவை உள்ளது.
பிஏ எல்.எல்.பி (ஹானர்ஸ்), பிபிஏ எல்.எல்.பி (ஹானர்ஸ்) 5 ஆண்டு படிப்பு உள்ளது. பி.காம், மற்றும் இரட்டை பட்டப்படிப்புகளாக பிஏ மற்றும் எம்.ஏ, பொது சேவையில் உள்ளது.
இரட்டை பட்டப்படிப்பு
டேட்டா சயின்ஸ் பாடத்தில் பிஎஸ்சி மற்றும் எம்எஸ்சி சேர்த்து இரட்டை பட்டப்படிப்பாக உள்ளது.
வித்தியாசமாக பி.காம், படிப்பு சிஎம்ஏ, சிஏ, சிஎப் மற்றும் ஏசிஎஸ் படிப்புகள் ஒருங்கிணைத்து 3 ஆண்டு படிப்பாக உள்ளது.
2021 ம் ஆண்டுக்கு இந்த இரண்டு மெரிட் உதவித் தொகையும் என்ஜினீயரிங் அல்லாத இதர பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவம் ஏற்கனவே 17 ந் தேதி வெளியாகி உள்ளது.
விண்ணப்பம் பெற கடைசி தேதி மே மாதம் 31 ந் தேதி ஆகும்.
இது பற்றி அறிய www.vitap.ac.in வலைதளம் பார்க்கலாம். 7901091283 என்ற எண்ணில் டாக்டர் தாகியா அப்சலை (அட்மிஷன் டைரக்டர்) தொடர்பு கொள்ளலாம்.