செய்திகள்

ரூ.2500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு

சென்னை, ஜன.9–

இந்த ஆண்டு 2 கோடியே, 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா ரூ.2,500 ரொக்கமும், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை அடங்கிய துணிப்பையுடன் கூடிய பொங்கல் பரிசு வழங்குவதை இப்பொதுக்குழு பெரிதும் பாராட்டுகிறது.

தமிழ்நாட்டு மக்கிளின் தேவை அறிந்து உதவி செய்யும் கருணை மிகு ஆட்சி நடத்திய அம்மா, பொங்கல் திருநாளை முன்னிட்டு பரிசுத் தொகுப்பும், ரொக்கமும் வழங்கி வந்தார்.

அந்த வகையில், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடனும், அமைதி–வளம்–வளர்ச்சி என்ற மகத்தான இலக்கை நோக்கியும், நாள்தோறும் வெற்றி நடை போடும் அம்மாவின் அரசு, தமிழர் திருநாளாம் பொங்கல் பெருநாளை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட, இந்த ஆண்டு 2 கோடியே, 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா ரூ.2,500 ரொக்கமும், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு செங்கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி பருப்பு, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய துணிப்பையுடன் கூடிய பரிசும் வழங்குவதை இப்பொதுக்குழு பெரிதும் பாராட்டுகிறது.

கொரோனா பெருந்தொற்றால் கடும் இன்னல்களுக்கும், பொருளாதார பாதிப்புகளுக்கும் உள்ளாகி இருக்கும் மக்களின் துயர் துடைக்க, தாயுள்ளத்தோடு ரூ.2,500 ரொக்கப்பரிசு வழங்கப்படுவதை இப்பொதுக்குழு பெரிதும் வரவேற்கிறது.

கடுமையான நிதி நெருக்கடி இருந்த போதிலும், மக்கள் தமிழர் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற கருணை மிகுந்த கொடை உள்ளத்துடன் பொங்கல் பரிசு வழங்கிட 5,604.84 கோடி ரூபாயை வாரி வழங்கி இருக்கும் வள்ளல் கரம் பொண்ட அம்மாவின் அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இப்பொதுக்குழு தனது நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து மகிழ்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *