சினிமா

‘போலீஸ் டைரி 2.0’ சீரியலில் ‘செக்ஸ்’ காட்சிகள் ஏன்? நடிகை குட்டி பத்மினி விளக்கம்

Spread the love

ஜீ5’ வெப் சானலில் இன்று முதல் ஒளிபரப்பாகும்

‘மும்பை மார்க்கெட்டைப் பிடிக்க வேண்டுமென்றால் மெட்ராஸ் மாமியாக இருந்தால் மட்டும் எடுபடுமா…?’

* 18 வயதிலிருந்து 35 வயது வரையிலானவர்கள் பார்க்கிறார்கள்

* உலகம் முழுதும் ஒளிபரப்பு

* ‘சென்சார்’ கிடையாது

சென்னை, நவ. 1–

பிரபல நடிகை குட்டி பத்மினி தயாரித்திருக்கும் வெப் சீரியல் தொடர் குறும்படம் ‘போலீஸ் டைரி 2.0’ ‘ஜீ5’ சானலுக்காகத் தயாரித்திருக்கும் இப்படத்தில் முதல் பாகத்திலும், 2ம் பாகத்திலும் அதிர்ச்சி தரும் ‘செக்ஸ்’ காட்சிகள் (ஒவ்வொன்றும் அதிகபட்சம் ஒரு நிமிடம் ஓடும்) இடம்பெற்றுள்ளன.

உலகம் முழுவதிலுமிருக்கும் ரசிகர்களுக்காக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த சீரியல் தொடரில் – பெட்ரூம் (படுக்கை அறை) காட்சிகள் வருகிறதே… என்று கேட்கலாம். குறிப்பாக 18 வயது முதல் 35 வயது வரையிலான இளையதலைமுறையினர் இது மாதிரி காட்சிகளை விரும்பிப் பார்க்கிறார்கள். அதற்காகத்தான், அதுவும் திரைக்கதை காட்சி நிர்ப்பந்தங்களுக்காக நாங்கள் செக்ஸ் காட்சிகளை எடுத்திருக்கிறோம். வெப் சீரியலுக்கு சென்சார் என்று எதுவுமில்லை. ஆங்கில துணைத் தலைப்பில் (இங்லீஷ் – சப்டைட்டில்) எடுத்திருக்கும் படம். மீண்டும் சொல்கிறேன் – உலகம் முழுவதிலும் இருக்கும் ரசிகர்களுக்காக…’ என்று நடிகை குட்டி பத்மினி குறிப்பிட்டார்.

ஸ்ரீராமானுஜர்.. போன்ற தரமான டெலிவிஷன் தொடர்களை எடுத்திருக்கும் நீங்கள், செக்ஸ் காட்சிகள் கொண்ட வெப் சீரியலை எடுக்கத்தான் வேண்டுமா என்று ஒரு கேள்விக்கு, ‘நாங்கள் எடுத்திருக்கும் இந்த செக்ஸ் காட்சிகள் பல டெலிவிஷன்களில் காட்டப்படும் ‘மிட்நைட் மசாலா’ நிகழ்ச்சியை விட ஒன்றும் மோசமில்லை என்றவர், ‘நீங்கள் தவறாக நினைத்துவிட வேண்டாம், அந்த மிட்நடை் மசாலாவை நான் பார்ப்பவள்… என்று’ சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

என் வெற்றிக்குப் பின்னால் என் 3 மகள்கள்

தென்னிந்தியாவில் நான் தயாரிக்கும் இந்த வெப் சீரியலுக்கு மும்பையில் பிரபல நிறுவனம் ஒன்றும் என்னோடு இணைந்திருக்கிறது. மும்பை மார்க்கெட்டைப் பிடித்து அதன் மூலம் உலகளவில் ரசிகர்களை பிடிக்க வேண்டும் என்றால், நான் மெட்ராஸ் மாமியாக இருந்துகொண்டிருந்தால்.. அது சாத்தியமா…?’ என்று எதிர்க்கேள்வி எழுப்பினார்.

ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு ஆண் இருப்பான் என்று சொல்வார்கள். என்னுடைய வெற்றிக்குப் பின்னால் என் 3 மகள்களும் இருக்கிறார்கள். அவர்கள் தான், ‘அம்மா பீல்டிலிருந்து ரிடையர் ஆகிவிடாதே…’ என்று எனக்கு புத்தி சொல்லி, என்னை தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

25 அண்டுகளுக்கு முன்பு நான் போலீஸ் – க்ரைம் சம்பந்தப்பட்ட டிவி தொடர்களை எடுத்தேன். அது ஒளிபரப்பான காலத்தில் க்ரைம்கள் 8% அளவுக்கு குறைந்திருந்ததாக அப்போது காவல்துறை தலைமை நிர்வாகி எனக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியிருந்தார். அதை இன்னமும் பாதுகாத்து வைத்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

‘‘ZEE5 app’’ போலீஸ் டைரி 2.0 தொடர் வெளியாகிறது இன்று. இதன் 2ம் பாகம் நாளை (சனி) ஒளிபரப்பாகும். மொத்தம் இரண்டே எபிசோடுகள் தான். இத்தொடரில் வின்சென்ட் அசோகன், சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கன், பூஜா ராமசந்திரன், அஞ்சனா ஜெயபிரகாஷ், பாலாஜி மோகன் நடித்துள்ளனர்.

குட்டி பத்மினி(அர்பாட் சினி பாக்டரி) தயாரித்துள்ள இந்த போலீஸ் டைரி 2.0, ஒரு அதிரடியானத் தொடர். இத்தொடர், தமிழ்நாட்டில் பதிவான 52 கொடிய க்ரைம்களைப் பற்றி விவரிக்கும். இரண்டு அத்தியாயம் தான். இரண்டுமே ஒரே வாரத்தில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும்.

ஒவ்வொரு க்ரைம் தொடரையும் இயக்குனர்கள் சிவமகேஷ், தனுஷ், பா. ராஜகணேசன், பவன், விக்ரனன், ரமேஷ் பாரதி இயக்கியிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் நடந்திருக்கும் பரபரப்பான கொலை – கொள்ளை – கடத்தல் – கற்பழிப்பு – தீவிரவாதிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை உள்ளடக்கிய 52 க்ரைம் விறுவிறு தொடர் இது. பத்திரிகைகளிலிருந்த பரபரப்பை விட ‘வெப்’பில் கூடுதல் பரபரப்பு விறுவிறுப்பு இருக்கும் எங்களின் 104 எபிசோடுகளிலும் என்றார் குட்டிபத்மினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *