போஸ்டர் செய்தி

92-வது பிறந்த நாள்: அத்வானிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Spread the love

புதுடெல்லி, நவ. 8–

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி, இன்று தனது 92-வது பிறந்த தினத்தை மிக எளிமையாகக் கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நமது இந்திய மக்களை மேம்படுத்துவதில் அத்வானி அளித்த சிறப்பான பங்களிப்பை இந்தியா எப்போதும் மதிக்கும். அத்வானியைப் பொறுத்தவரை பொதுச்சேவை என்பது எப்போதும் நியாயங்களுடன் தொடர்புடையது. இதனை ஒரு முறை கூட அத்வானி சமரசம் செய்ததில்லை. அமைச்சராக இருந்தபோது முன்னிலையில் இருந்தார். அவரது நிர்வாகத் திறன்கள் உலக அளவில் பாராட்டப்படுகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *