வர்த்தகம்

நவீன கம்பிரசருடன் உணவு கெடாமல் பாதுகாக்கும் லாயிட் புதிய பிரிஜ்: சசி அரோபா அறிமுகம்

குறைந்த மின்சாரத்தில் செயல்படும்

நவீன கம்பிரசருடன் உணவு கெடாமல் பாதுகாக்கும் லாயிட் புதிய பிரிஜ்: சசி அரோபா அறிமுகம்

சென்னை, செப். 25–

குறைந்த மின்சாரத்தில் செயல்படும் நவீன கம்பிரசருடன் பாக்டீரியாவை ஒழித்து உணவு கெடாமல் பாதுகாக்கும் வசதி கொண்ட லாயிட் ஏ.சி. நிறுவனத்தின் புதிய பிரிஜை இதன் தலைமை செயல் அலுவலர் சசி அரோபா அறிமுகம் செய்தார்.

ஏர்கண்டிஷனர் தயாரிப்பி்ல் முன்னணியில் உள்ள லாயிட் நிறுவனம், பல்வேறு ரக பிரிஜ் அறிமுகம் செய்துள்ளது. புதுமை டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் பிரிஜ், 190 லிட்டரிலிருந்து, 587 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரகங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ. 85 ஆயிரம் வரை விலையில் உள்ளது.

பல்வேறு பேன், டியூப்லைட், மின்சார சாதனங்கள் தயாரிக்கும் ஹேவல்ஸ் குரூப் அங்கமாக லாயிட் இந்தியா திகழ்கிறது.

ஏர்கண்டிஷனர் துறையில் முன்னணியில் உள்ள லாயிட், பனிகட்டியாக உறையாத பிரிஜ், இன்வெர்டர் பிரிஜ் ஆகியவை அறிமுகம் செய்துள்ளது.

ரெப்ரிஜ்ரேட்டர்கள் வெவ்வேறு கொள்ளளவுகள் மற்றும் விலைக்கு ஏற்ப சிறப்பம்சங்களை கொண்டிருக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களையும் குளிர்வித்து வைக்கலாம்.

இன்வெர்டர் தொழில் நுட்பத்தின் காரணமாக மிகக் குறைவான மின்சார பயன்பாடு மற்றும் செலவினம் கொண்டதாக இந்த பிரிஜ் இருக்கும் என்று சசி அரோபா கூறினார்.

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாட்டில் மிக அதிகம் தேவைப்படும் அம்சமாக இது இருக்கிறது. ஒவ்வொரு மூலையிலும் உரிய குளிர்விப்பை உறுதி செய்கிற தனித்துவமான டெகாகூல் தொழில்நுட்பமும் இதில் இடம் பெறுகிறது.

குறைவான மிக்சாரத்தை பயன்படுத்துகிற இரட்டை பாதுகாப்பபு கம்ப்ரஸர் இப்புதிய பிரிஜ்ஜில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *