செய்திகள்

கலசபாக்கம் தொகுதி மேல்வில்வராயநல்லூர் அரசு பள்ளியில் புதிய அம்மா கலையரங்கம்

கலசபாக்கம் தொகுதி மேல்வில்வராயநல்லூர் அரசு பள்ளியில் புதிய அம்மா கலையரங்கம்

கலெக்டர் சந்தீப்நந்தூரி, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தனர்

ஆரணி: டிச. 2–

கலசபாக்கம் தொகுதி மேல்வில்வராயநல்லூர் அரசு பள்ளியில் கட்டப்பட்ட புதிய அம்மா கலையரங்கத்தை கலெக்டர் சந்தீப்நந்தூரி, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், மேல் வில்வராயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அம்மா கலையரங்கத்தை வி. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதவாது:

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் அவர்களது தொகுதியில் பல்வேறு பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அவரது தொகுதி நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மேல்வில்வராயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கலையரங்கம் கட்டித் தந்துள்ளார். பள்ளியில் கலையரங்கம் இல்லை என்றால் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த முடியாது என ஆசிரியர்களுக்கு தெரியும். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மட்டும் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளார். இதன் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்கள், பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, போளுர் மாவட்ட கல்வி அலுவலர் ஆர். கலைவாணி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஆர். பிரமிளா, தலைமை ஆசிரியர். ஆர். ஏ. பரிமளா, மேல்வில்வராயநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் நிலவழகி பொய்யாமொழி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *