செய்திகள்

ஏரியில் ஐம்பொன் சிலையின் பாதம் கண்டெடுப்பு

Spread the love

காஞ்சீபுரம்,பிப்.13-

வையாவூர் ஏரியில் மீன்பிடிக்க சிறுவர்கள் விரித்த வலையில் ஐம்பொன் உருவச் சிலையின் பாதம் மற்றும் பீடம் கண்டெடுக்கப்பட்டன.

காஞ்சீபுரம் அருகே வையாவூர் ஏரியில், இப்பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மீன்பிடித்து வருவது வழக்கம். இந்தநிலையில் சிறுவர்கள் மீன் பிடிக்க ஏரியில் வலை வீசினர். அப்பொழுது இழுக்க முடியாத அளவுக்கு ஒரு பொருள் தட்டுப்படவே, அருகில் இருந்த பெரியவர்களின் உதவியுடன் வலையில் சிக்கிய பொருளை ஏரியில் இருந்து எடுத்து பார்த்தபோது பீடம் மற்றும் கால்கள் மட்டுமே கொண்ட சிலை இருந்தது. நெற்கதிர்களைப் பரப்பி அச்சிலையை அதில் நிற்க வைத்து வழிபட்டனர்.

சிலை பாதங்களின் மேல்பகுதி உடைந்திருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர். அச்சிலை கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *